உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 11, 12 வகுப்புகளில் ரோபோட்டிக்ஸ்,ஏ.ஐ., பாடம்: வரும் கல்வியாண்டில் அறிமுகம்!

11, 12 வகுப்புகளில் ரோபோட்டிக்ஸ்,ஏ.ஐ., பாடம்: வரும் கல்வியாண்டில் அறிமுகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., பாடமுறையில் பயிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ்,செயற்கை நுண்ணறிவு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 2025-26ம் ஆண்டு முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் முக்கிய மாற்றங்களை கொண்டு வர இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில்(CISCE) திட்டமிட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020ன் படி இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. அதன் முக்கிய கட்டமாக 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு படிப்புகளை கொண்டு வருகிறது. தொடக்க நிலையில் இந்த புதிய படிப்புகள் ஒருங்கிணைந்த முறையில் தான் அளிக்கப்பட உள்ளது. கம்ப்யூட்டர் சயின்சுடன் செயற்கை நுண்ணறிவு பாடமும் சேர்க்கப்படுகிறது. இதுதவிர முக்கிய அம்சமாக மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படுத்தப்பட்டு உள்ளதா என்று மதிப்பெண் அட்டை முறையில் கணக்கீடு செய்யப்பட திட்டமிட்டு உள்ளது. போட்டித் தேர்வுகளின் போது மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற ஏதுவாக, இதுபோன்ற பாடமுறை மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. தேசியக்கல்வி கொள்கையை பின்பற்றி கொண்டு வரப்படும் இந்த மாற்றங்கள் மூலம் கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள் என்று கணிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RAMAKRISHNAN NATESAN
அக் 08, 2024 14:09

அவர்களுக்கு இப்போதே என்ன அவசியம் ????


Neutrallite
அக் 08, 2024 11:18

இதுவே காங்கிரஸ் ஆட்சியா இருந்தா Basics of computers லேயே இருந்திருப்போம்.


Lion Drsekar
அக் 08, 2024 10:23

வாழ்த்துக்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு நான் பள்ளியில் இதைத்தான் வலியுறுத்தினேன் ராமகிருஷ்ணா பள்ளியின் தலைமை ஆசிரியர் என் பெற்றோரை வரவழைத்து கூறிய அறிவுரை, இவன் நாங்கள் நடத்தும் பாடங்களை படிக்க மாட்டேன் என்கிறான், காரணம் கேட்டால் இதனால் வாழ்க்கைக்கு என்ன பயன் என்று கேட்க்கிறான், ஆகவே இவனை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுங்கள் என்று கூறினார், நான் அவரிடம் கூறினேன் சார், என் பெற்றோர்களும் இதே படிப்பு, இதே தேர்வுதான் எழுதினார்கள், இதனால் வாழ்க்கைக்கு என்ன பயன் ?வாழ்க்கைக்கு கல்வி என்பது அவரவர்களுக்கு தோன்றும் கருத்துக்களுக்கே ஏற்ப , எதிர்காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப கல்விமுறையை ஆண்டுதோறும் மாற்றவேண்டும் எழுதுவதற்கு மற்றும் பேசுவதற்கு மொழி தேவை அதே போன்று விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார அழற்சி, விவசாய வளர்ச்சி என்று அடுக்கிக்கொண்டே பேசினேன் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை, காரணம் அரசாங்கம் பிரிண்ட் செய்த எழுத்துக்களை உள்வாங்கவில்லை, பிறகு புரிந்துகொண்டு புத்தகத்துக்கும் மதிப்பு கொடுத்து அரவணைத்து பட்டங்கள் பெற்றது நினைவுக்கு வருகிறது, பரவாயில்லை நான் நினைத்தது இன்று ஒன்று நிறைவேறிவிட்டது , பாராட்டுக்கள், அதுவும் அன்று நான் கண்டுபிடித்த அதே ரோபோடிக்ஸ் . இந்த செய்தி என்னைவிட இவ்வுலகில் யாருக்கும் இதுபோன்ற ஒரு மகிழ்ச்சி இருக்காது . மனமார்ந்த பாராட்டுக்கள், வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை