உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் சுத்தமான காற்றை சுவாசிக்கும் நகரங்கள்; டாப் 10 பட்டியல் இதோ!

இந்தியாவில் சுத்தமான காற்றை சுவாசிக்கும் நகரங்கள்; டாப் 10 பட்டியல் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் சுத்தமான காற்றை சுவாசிக்கும் 10 நகரங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் கர்நாடகாவில் இரண்டு நகரங்களும், தமிழகத்தில் ராமநாதபுரமும், இடம்பிடித்து உள்ளன.பண்டிகை காலம் மற்றும் குளிர்காலம் துவங்கியதைத் தொடர்ந்து, முக்கிய நகரங்கள், குறிப்பாக வட இந்தியா முழுவதும், தற்போது கடும் காற்று மாசுபாட்டில் சிக்கித் தவிக்கின்றன. காற்று மாசுபாடு இல்லாத அல்லது குறைந்த அளவே மாசுபாடு உள்ள டாப் 10 நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் உள்ள 'டாப் 10' தூய்மையான நகரங்கள் பட்டியல் இன்று (நவ.,24) வெளியானது. நகரம் (மாநிலம்)- காற்றின் தரக்குறியீடு- வகை1. ஐஸ்வால் (மிசோரம்)- 50- நல்லது.2. பாகல்கோட் (கர்நாடகா)- 46- நல்லது.3. சாமராஜநகர் (கர்நாடகா)- 44- நல்லது.4. கவுகாத்தி (அசாம்)- 82- திருப்திகரமானது.5. கொல்லம் (கேரளா)- 61- திருப்திகரமானது.6. நாகோன் (அசாம்)- 56- திருப்திகரமானது.7. ராமநாதபுரம் (தமிழகம்) 68- திருப்திகரமானது.8. ரிஷிகேஷ் (உத்தரகண்ட்) - 73- திருப்திகரமானது.9. ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்)- 80- திருப்திகரமானது.10. திருச்சூர் (கேரளா)- 50 - திருப்திகரமானது. டில்லியில் இன்று மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது. காற்றின் தரம் 366 ஆக மிகவும் மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காற்று தரக்குறியீடு

பூஜ்யம் முதல் 50 - சிறப்பு51 முதல் 100 வரை - திருப்திகரமானது101 முதல் 200 வரை - மிதமானது201 முதல் 300 வரை - மோசமானது301 முதல் 400 வரை - மிகவும் மோசமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

D.S.ANANDH
நவ 26, 2024 02:40

சரியாக சொன்னீர்கள் ??


Ram pollachi
நவ 24, 2024 19:12

இராம் நாடு பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவு, உப்பு காற்று, உப்பு நீர் தொழிற் சாலைகள் இல்லை, ஜனங்கள் எல்லாம் சென்னை, கோவை வந்து படகு ஓட்டுவது போல் கால் டாக்சிகளை தாறுமாறாக இயக்குவது, திருச்சியில் இருந்து குருவியாக பறந்து சிங்கப்பூர் மலேசியா துபாய் என ஒரே பிசி... பராமரிப்பு இல்லாத பாழடைந்த கோவில்கள் பல... மனிதன் எங்கு அதிகம் இல்லையோ அந்த இடம் படு சுத்தமாக இருக்கும்.


Akila Mohan
நவ 24, 2024 17:22

அனைவரும் அந்தமானை மறந்துட்டாங்க வந்து பாருங்கள் எவ்வளவு ரம்மியமான இருக்கும் என்று


Yasararafath
நவ 24, 2024 15:07

இந்த பட்டியலில் தமிழகம் இருப்பது சிறப்பு.


SUBBU,
நவ 24, 2024 11:41

We miss you, Seasonal Environment Activists. You can vanish now for 365 days. I am hoping to see you again on Diwali next year.


கனோஜ் ஆங்ரே
நவ 24, 2024 11:20

அதிகபட்சமாக... தமிழ்நாட்டில் திருப்திகரமானதாகவே இருக்கும்... அதிலும், இராமநாதபுரம் சிறப்பு... ஏனெனில், தமிழ்நாட்டுக்காரனுங்க தன் உடலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமா வச்சிருக்கிறவனுங்க... ஏன்னா, நாகரிகத்தில் தொட்டில் தமிழ்நாடு... இதெல்லாம் காட்டுமிராண்டிகள் கும்பலுக்கு தெரிய வாய்ப்பில்ல... கல்வி, சுகாதாரம், ஒழுக்கம், தூய்மை, நாகரிகம், பண்பாடு, கலை இவற்றில் அதிகபட்சமாக சிறந்து விளங்குபவர்கள்... அறிவாளிங்க...? இது சில ஜென்மங்களுக்கு தெரியாது, புரியாது..?


கிஜன்
நவ 24, 2024 11:16

ராமநாதபுரம் ....நவாஸ்கனியின் தொகுதி அல்லவா .... சுத்தமாகத்தான் இருக்கும் .... இதில் என்ன ஆச்சர்யம் ?


rama nujam
நவ 25, 2024 19:24

நவாஸ் கான் உமதுசொந்தகாரரா..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை