உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி கூட்டுக்குழு கூட்டத்தில் மோதல்: தண்ணீர் பாட்டிலை வீசிய திரிணமுல் எம்.பி.,

பார்லி கூட்டுக்குழு கூட்டத்தில் மோதல்: தண்ணீர் பாட்டிலை வீசிய திரிணமுல் எம்.பி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வக்பு வாரிய மசோதா தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட பார்லி கூட்டுக்குழு கூட்டத்தில் எம்.பி.,க்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், கண்ணாடி தண்ணீர் பாட்டிலை எடுத்து மேஜையில் அடித்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கைவிரலில் காயம் ஏற்பட்டது. அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பா.ஜ., எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டுக்குழு

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது லோக்சபாவில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அதன் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பா.ஜ., எம்.பி., ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 பேர் அடங்கிய இந்த குழுவில் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.

எதிர்ப்பு

இந்நிலையில் இந்தக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக்கூட்டத்தில் எம்.பி.,க்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: வக்பு வாரிய மசோதா தொடர்பாக நேற்று பார்லிமென்ட் வளாகத்தில் கூட்டுக்குழுவின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி 3 முறை பேசினார். மீண்டும் 4வது முறையாக பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார். அதற்கு எம்.பி., அபிஜித் கங்கோபாத்யாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இருவருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபத்தின் உச்சிக்கு சென்ற கல்யாண் பானர்ஜி, அங்கிருந்த கண்ணாடி தண்ணீர் பாட்டிலை எடுத்து மேஜையில் ஓங்கி அடித்தார். பிறகு அதனை எடுத்து கூட்டுக்குழு தலைவரை நோக்கி வீசினார். இதில், கல்யாண் பானர்ஜிக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனையடுத்து கல்யாண் பானர்ஜியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பா.ஜ., எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

raja
அக் 23, 2024 04:10

கல்லெறி கூட்டத்துக்கு ஆதரவா இப்போ பாட்டில் எரியும் கூட்டம் உருவாயிருக்கு....


Nandakumar Naidu.
அக் 23, 2024 00:20

இந்த மாதிரி ரவுடிகள் எல்லாம் நம் நாட்டின் பிரதிநிதிகள். அவனை உடனடியாக பதவியிலிருந்து 5 வருடங்களுக்கு நீக்க வேண்டும். மீண்டும் போட்டியிட அனுமதிக்க கூடாது.


ஆரூர் ரங்
அக் 22, 2024 21:44

விட்டால் அடுத்து சோடா பாட்டில்?


Ramesh Sargam
அக் 22, 2024 19:49

இன்று தண்ணீர் பாட்டிலை வீசியவரை, தண்டிக்காமல் விட்டால், நாளை வேறு ஏதாவது ஆயுதத்தை வீசி மற்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாக செயல்படுவார். உடனே தண்டிக்கவும். சில காலம் அவை நிகழ்வுகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யவும்.


GMM
அக் 22, 2024 19:39

மம்தா எம். பி. யின் பாராளுமன்ற உறுப்பினர் மசோதாவுக்கு வாக்களிக்கும் அதிகாரம் சட்ட , தேர்தல் ஆணைய , சபாநாயர் நடவடிக்கை முடியும் வரை முடக்க வேண்டும். இந்துக்களின் நில பகுதியை பிடுங்கி, பாகிஸ்தான் , பங்களாதேஷ் இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கொடுத்த பின், இந்தியாவில் வக்ஃப் வாரியம் எதற்கு? கிருத்துவ மத வாரியம்... என்று பல அமைத்து நாட்டை கூறு போட போகிறீர்களா? முதலில் இந்துகள் நில பரப்பை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அந்த நாடுகள் நில உபயோக கட்டணம் வழங்க வேண்டும்.


G Mahalingam
அக் 22, 2024 18:39

காங்கிரஸ் திமுக மம்தா பானர்ஜி கட்சி எல்லாம் இஸ்லாமியர்களுக்கான கட்சிகள். இந்துக்களை பற்றி கவலை இல்லை. 1000 ரூபாயை கொடுத்தால் இந்துக்கள் வோட்டு போட்டு விடுவார்கள் என்ற தைரியம்.


S Srinivasan
அக் 22, 2024 18:33

When this TMC and Cong. will stop this appeasement politics?, why there is opposition for needed legislation, if it is against miorities mr modi himself will not bring it every one in thr country have rights


sankaranarayanan
அக் 22, 2024 18:12

அவரை எந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள் அவரை மன நலம் பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் எல்லாமே சரியாகிவிடும் பிறகு அவரை பதவியை மன நலம் குன்றியவர் என்று பறிக்க வேண்டும் இதுதான் இதுபோன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு பாடமாகும்


Sathyanarayanan Sathyasekaren
அக் 22, 2024 17:59

ஹிந்துக்களே கண்களை நன்றாக திறந்து நடப்பதை பாருங்கள். ஹிந்துக்களின் சொத்தை கோவில்கள் உள்பட பாலைவனத்தில் இருந்து கொள்ளையடிக்க வந்த காட்டுமிராண்டி கும்பலுக்கு தரை வார்க்க, அநியாயமாக இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தங்கள் செய்ய இந்த தறுதலைகள் எப்படி எதிர்க்கிறார்கள் என்று. இப்போதாவது சொரணை வந்து திருட்டு திராவிட கட்சிகளுக்கும் அவற்றின் அடிமை ஜாதி கட்சிகளுக்கும், கான் ஸ்கேன் போலி காந்தி திருட்டு காங்கிரஸ் கட்சிக்கும் வோட்டு போடுவதை நிறுத்துங்கள்.


A Viswanathan
அக் 23, 2024 13:01

அங்கு முஸ்லிம்களின் ஒட்டு இவர்களுக்கு வேண்டும்.அதனால் எதை வேண்டுமானாலும் உடைப்பார்கள்


சமீபத்திய செய்தி