உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துப்புரவு ஊழியர் பலி நிறுவனம் மீது வழக்கு

துப்புரவு ஊழியர் பலி நிறுவனம் மீது வழக்கு

குருகிராம்:எட்டாவது மாடியில் இருந்து விழுந்த துப்புரவு பணியாளர் உயிரிழந்த சம்பவத்தில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஜோய் ஹஸ்தா,23. ஹரியானா மாநிலம் குருகிராம் மானேசரில் உள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவன துப்புரவு பணியாளர்.நிறுவனத்தின் எட்டாவது மாடியில் துப்புரவு பணி செய்தபோது, அங்கிருந்து தவறி விழுந்தார். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ஹஸ்தாவின் தாய் அஞ்சலி கொடுத்த புகாரில், ''அந்தக் கட்டடத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் தன் மகன் பலியாகி விட்டான்,'' என, கூறியிருந்தார்.இதுகுறித்து, தொலைத் தொடர்பு நிறுவனம் மீது மானேசர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ