உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காற்று மாசை கட்டுப்படுத்த மேக விதைப்பு: அரசு முடிவு

காற்று மாசை கட்டுப்படுத்த மேக விதைப்பு: அரசு முடிவு

புதுடில்லி:“டில்லியில் மேக விதைப்பு சோதனை நடத்த சுற்றுச்சூழல் துறை முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு சோதனைக்கும் 1.5 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது,”என, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறினார்.நிருபர்களிடம் சிர்சா கூறியதாவது:தலைநகர் டில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த செயற்கை மழை பெய்விக்க மேக விதைப்பு திட்டம் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டம் தாக்கல் செய்யப்பட்டு விரிவான ஆலோசனை நடத்தப்படும். ஒவ்வொரு மேக விதைப்பு சோதனைக்கும் 1.5 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் தடையில்லா சான்றிதழ்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்படும்.இந்தச் சோதனையை நடத்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம், பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், மத்திய சுற்றுச்சூழல் துறை, வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவற்றிடம் இருந்து 13 தடையில்லா சான்றிதழ்கள் பெற வேண்டும்.புறநகர் பகுதியில் கோடைகாலத்தின் உச்சநாளில் முதல் சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளோம்காற்று மாசைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், மாசு மிகஅதிகமாக இருக்கும் நேரத்தில் மேக விதைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த குளிர்காலத்தில் காற்றின் தரக்குறியீடு 450ஐ தாண்டி அபாய நிலைக்குச் சென்றது. இந்தச் சோதனைக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன், இந்த திட்டத்தை செயல்படுத்த ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். திட்டம் தயாரிப்பது முதல் செயல்படுத்துவது வரை அனைத்தையும் கான்பூர் ஐ.ஐ.டி.,யிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி