மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
3 hour(s) ago | 10
பெங்களூரு : அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ஊழியர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கும்படி, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.கர்நாடக அரசு அலுவலகங்களில் நுாற்றுக்கணக்கான ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.இன்னும் பலர், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, வெளி ஒப்பந்தம் அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர்.இதுபோன்று, வாரியங்கள், கிராம பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பணியாற்றுகின்றனர். அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றாலும், இவர்களுக்காகவே ஆலோசகர், சிறப்பு அதிகாரி உட்பட பல்வேறு பொறுப்புகள் உருவாக்கப்படுகின்றன.அவர்களுக்கு ஓய்வூதியத்துடன், ஒப்பந்த அடிப்படையில் சம்பளம், அரசு வாகன வசதி வழங்கப்படுகின்றன. இது, பொருளாதார ரீதியில் அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. மேலும், பணிகள் தாமதமாகின்றன.இளைய அதிகாரிகளை, தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்வதாகவும் அரசு வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஊழலும் படிந்துள்ளது.இந்நிலையில், அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ஊழியர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கும்படி முதல்வர் சித்தராமையா, தலைமை செயலர் ரஜனீஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
3 hour(s) ago | 10