மேலும் செய்திகள்
தேசியக்கொடி ஏந்தி வர்த்தகர்கள் வெற்றி முழக்கம்
09-May-2025
புதுடில்லி:பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுத்த நம் ராணுவத்தை கவுரவிக்கும் வகையில், சீக்கிய இளைஞர்கள் 'கல்சா திரங்கா' என்ற பெயரில், தேசியக் கொடி ஏந்தி புதுடில்லியில் பேரணி நடத்தினர்.புதுடில்லி டால்கொட்டாரா மைதானத்தில், முதல்வர் ரேகா குப்தா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.டில்லி மாநகரின் முக்கியச் சாலைகள் வழியாக சென்ற இந்தப் பேரணி, கர்தவ்ய பாதையில் நிறைவடைந்தது.பேரணியில் பங்கேற்ற சீக்கிய இளைஞர்கள், பைக்குகளில் தேசியக் கொடியை ஏந்தி தேசபக்தி கோஷங்களை முழங்கிச் சென்றனர்.அமைச்சர்கள் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, ஆஷிஷ் சூட் ஆகியோரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.பேரணியை துவக்கி வைத்து ரேகா குப்தா பேசும்போது, “நாட்டின் துணிச்சலான சமூகங்களில் கல்சா சமூகமும் ஒன்று. பயங்கரவாதத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்க கல்சா இளைஞர்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனர். கல்சா இளைஞர்கள் நம் ஆயுதப்படைக்கு இணையானது. இந்த ஒற்றுமைப் பேரணி, நாடு முழுதும் உள்ள மக்களை ஊக்குவிக்கும்,”என்றார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். அதற்கு, 'ஆப்பரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.நம் ராணுவத்தின் ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்காக நம் ராணுவம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்கும் வகையில், நாடு முழுதும் பா.ஜ., மற்றும் மாநில அரசு சார்பில் தேசியக் கொடி பேரணி நடத்தப்படுகிறது. பல்வேறு அமைப்பினரும் இந்த வெற்றிப் பேரணியை நடத்தி வருகின்றனர்.
09-May-2025