உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வட மாநிலங்களை வாட்டும் குளிர்காற்று; மைனஸ் டிகிரியில் பதிவாகும் வெப்பநிலை

வட மாநிலங்களை வாட்டும் குளிர்காற்று; மைனஸ் டிகிரியில் பதிவாகும் வெப்பநிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நம் நாட்டின் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் நிலையில், காஷ்மீரில் மைனஸ் டிகிரியில் வெப்பநிலை பதிவாகி வருகிறது. டில்லி, ஹிமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் பனிமூட்டம் ஏற்படுவதுடன், இயல்பைவிட குறைந்த வெப்பநிலை நீடிக்கிறது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வட மாநிலங்களில் வீசும் குளிர் காற்று மத்திய மஹாராஷ்டிரா, ஒடிஷா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்றுவரை நீடிக்கும். இதேபோல் தெலுங்கானா, வடக்கு உள் கர்நாடகாவிலும் நாளை வரை குளிர்காற்று வீசும். ஒடிஷாவின் அனுகுல், சுந்தர்கர், கேந்திரபாரா, கலஹண்டி, கோராபுட் ஆகிய பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை, 10 டிகிரி செல்ஷியஸுக்கும் குறைவாக பதிவானது. இதே நிலை, நாளை வரை நீடிக்க வாய்ப்புள்ளதால், அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் வெப்பநிலை, உறைபனி நிலைக்கும் கீழே சரிந்தது. குப்வாராவில் மைனஸ் 3.6 டிகிரி செல்ஷியஸ், பஹல்காமில் மைனஸ் 4.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இதேபோல் ஹிமாச்சலில் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்காற்று வீசுவதால், ரோஹ்தாங் பாதை, குலு மாவட்டத்தின் டார்ச்சா பகுதிக்கு செல்லும் பாதை உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. உத்தரகண்டில் கடும் குளிர் காற்று வீசும். டில்லியில், குளிர் 8 டிகிரி செல்ஷியஸாக பதிவாகி உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில், வெப்பநிலை இதைவிட குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Loganathan Kuttuva
டிச 13, 2025 14:38

வடஇந்தியாவில் குளிர் காலங்களில் வீட்டிலும் அலுவலகங்களிலும் குளிர் சாதனங்களை இயக்க மாட்டார்கள் .ரயில்களில் ஏசி இயங்காது .


Skywalker
டிச 13, 2025 07:49

if tamilnadu is the cleanest state in india, i love tamilnadu but I won't randomly


பேரரசு
டிச 13, 2025 05:51

அங்கங்கே தெருவில் கெடக்கும் குப்பையை கொளுத்தி குளிர்காய ஆரமிச்சுருவாங்க. இன்னும் நூறு வருசம் ஆனாலும் திருந்த மாட்டாங்க. நாமதான் வல்லரசு.


Sambath
டிச 13, 2025 06:59

உங்க அக்கறை புரியுது. நீங்க ஒரு நல்ல தீர்வு சொன்னா - பேரரசு என்பது எல்லோருக்கும் புரியும்


jss
டிச 13, 2025 09:46

கேள்வி கேட்பது எளிது. ஒரு ப்ராப்ளத்திற்க்கு தீர்வு சொல்வது கடினம். அதற்காகாக கெளவியே கேட்க்கூடாது என்று சொல்லவில்லை. தெரிந்த காரணத்திற்க்கு கேள்வி கேட்பதை நிறுத்தவேண்டும்.


பேரரசு
டிச 13, 2025 10:40

தீர்வு சொன்னா அப்பிடியே கேட்டு நடந்துறப் போறீங்க. அல்லாருக்கும் வீடு குடுத்திருந்தா விட்டுக்குள்ளே குளிர்காய்வோம்லா..


Barakat Ali
டிச 13, 2025 12:25

இன்னொரு பேரு அப்பாவியா ????


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ