உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தரகண்டில் பொது சிவில் சட்டம்; ஜன.,27ல் அமல்

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம்; ஜன.,27ல் அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் ஜன.,27ல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது.வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு, அவரவர் மத நடைமுறைகளின் அடிப்படையில் திருமணம், விவாக ரத்து, சொத்துரிமை, தத்து எடுப்பது, ஜீவனாம்சம் தொடர்பான சட்டங்கள் தற்போது அமலில் உள்ளன.இதை மாற்றி, அனைத்து மதத்தினருக்கும் ஒரே பொது சிவில் சட்டமாக இருக்க வேண்டும் என்பது நீண்ட காலமாக இருந்து வரும் கோரிக்கை. அதன் அடிப்படையில் பா.ஜ., ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இது குறித்து உத்தரகண்ட் மாநில தலைமை செயலாளர் ஷைலேஷ் பகவுலி கூறியதாவது:பிரதமர் மோடி வரும் 28ம் தேதி உத்தரகண்ட் வருகிறார். அவர் வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, மாநிலத்தில் ஜன.,27ல் பொது சிவில் சட்டம் அமல் செய்யப்படுகிறது.இதையொட்டி, பொது சிவில் சட்டத்துக்கான இணைய தளத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். சுதந்திர இந்தியாவில், பொது சிவில் சட்டத்தை அமல் செய்யும் முதல் மாநிலமாக உத்தரகண்ட் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 25, 2025 21:52

உச்ச நீதிமன்றமே ஆதரித்த ஒன்று ...... நாடு முழுவதும் தேவை ......


GMM
ஜன 25, 2025 21:24

பொது சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் போல் அவசியம். பாராளுமன்றத்தில் 2/3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அரசியல் /சுயநல காரணங்களுக்காக இல்லை. சாதி, மத, இன, ,மொழி சம்பிரதாயம் வீட்டிற்கும் மட்டும். மத வரி வசூல் முறை மாறுபடும். அரசுக்கு அந்த முறையை பின்பற்றி ஏன் வருமான வரி செலுத்துவது இல்லை. ஏற்க மறுக்கும் சாதி, மதத்தினர் வாக்குரிமை, குடியுரிமை நிறுத்த வேண்டும். காங்கிரஸ் இந்தியாவில் வக்பு வாரியம் அமைத்தது. பாகிஸ்தான் , வங்கதேசத்தில் இந்து சனாதன வாரியம் இருக்கா? நாடுமுழுவதும் பொது சிவில் சட்டம், குடியுரிமை கட்டாயம் தேவை.


sankaranarayanan
ஜன 25, 2025 21:11

இந்த சட்டம் வடக்கிலிருந்து ஆரம்பித்து மத்திய பகுதிக்கு வந்து பிறகு கிழக்கு மேற்கு திக்குகளுக்கு பரவி பின் கடைசியாக தெற்கு முனைக்கு வந்தால் நல்லது நாட்டுமக்கள் சுபிக்ஷமாக இருப்பார்கள் டிரம்பின் அவதாரமாக மோடி அவர்கள் இருப்பார். நாடும் முன்னேறும் மக்களும் முன்னேறுவார்கள்


சிவம்
ஜன 25, 2025 19:26

பொது சிவில் சட்டம் மாநில அரசின் அதிகாரத்தில் வருகிறதா? அப்போ மத்திய அரசு இந்த சட்டத்தை எல்லா மாநிலங்களுக்கும் கட்டாயப்படுத்த முடியாதா? யாராவது விளக்குங்கள்.


SUBBU,MADURAI
ஜன 25, 2025 20:39

UCC will be IMPLEMENTED in Uttarakhand from 27th Jan Uttarakhand becomes 1 st state to implement UCC In future, more BJP ruled state may implement UCC.


RK
ஜன 25, 2025 18:45

வாழ்த்துக்கள். உண்மையான இந்தியன் மோடி அய்யா அவர்களே. வாழ்த்துக்கள். அமெரிக்காவின் டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவிற்கு எவ்வளவு நல்லது செய்கிறார்கள் என்பதை போல் இந்தியாவிலும் எல்லா மதத்தவர்க்கும் ஒரே சட்டம் என்பது கண்டிப்பாக வேண்டும். அதுபோல் சட்டத்திற்கு புறம்பான வந்தேறிகளை விரட்டி அடிக்க வேண்டும்.


கந்தண்
ஜன 25, 2025 18:24

இப்படிதான் இருக்கனும் தமிழகத்துக்கும் வேனும் நடக்குமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை