மேலும் செய்திகள்
பெரும் தவறு!
5 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
6 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
6 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
8 hour(s) ago
ஹாவேரி: லஞ்சம் தராத லாரி உரிமையாளர், டிரைவரை தாக்கிய, எஸ்.ஐ., மீது, எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.ஹாவேரியின் ராணிபென்னுார் குட்டல் போலீசார் நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மணல் லாரி வந்தது. லாரியை நிறுத்திய எஸ்.ஐ., சங்கர் கவுடா, லாரியின் ஆவணங்களை சரிபார்த்தார். லாரி உரிமையாளர் குட்டப்பா, டிரைவர் திம்மப்பாவிடம், 'லாரியில் மணல் கடத்துகிறீர்களா?' என, சங்கர் கவுடா கேட்டு உள்ளார்.அப்போது லாரி உரிமையாளர் குட்டப்பா, “மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கித் தான், மணல் எடுத்துச் செல்கிறோம்,” என்று கூறி உள்ளார். அதை ஏற்க மறுத்த சங்கர் கவுடா, 80,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மறுத்ததால் குட்டப்பா, திம்மப்பாவை தாக்கி உள்ளார். காயம் அடைந்த இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.நேற்று மதியம் ஹாவேரி எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்ற குட்டப்பா, எஸ்.ஐ., சங்கர் கவுடா மீது எஸ்.பி., அன்சுகுமாரிடம் புகார் செய்தார். “எஸ்.ஐ., மீது விசாரணை நடத்தி, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கிறேன்,” என, எஸ்.பி., உறுதி அளித்தார்.
5 hour(s) ago
6 hour(s) ago | 1
6 hour(s) ago
8 hour(s) ago