உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேஷன் ஷோவில் கோலாப்பூர் செருப்புகள் புவிசார் அடையாள உரிமைமீறல் என புகார்

பேஷன் ஷோவில் கோலாப்பூர் செருப்புகள் புவிசார் அடையாள உரிமைமீறல் என புகார்

மும்பை: இத்தாலியில் நடந்த, 'பேஷன் ஷோ'வில் கோலாப்பூர் செருப்புகள் வடிவத்தில் புதிய காலணிகளை சர்வதேச தனியார் நிறுவனம் தங்கள் பெயரில் சந்தைப்படுத்தியது, புவிசார் அடையாளத்தின் உரிமைமீறல் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மஹாராஷ்டிராவின் கோலாப்பூரில் தயாரிக்கப்படும் தோல் வகை செருப்புகள் உலகம் முழுதும் புகழ்பெற்றவை.

புவிசார் குறியீடு

கடந்த 12ம் நுாற்றாண்டு முதல் கைகளாலேயே தயாரிக்கப்பட்டு, விதவிதமான வடிவங்களில் விற்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் இந்த செருப்புகளின் விலை 1,500 முதல் 3,000 ரூபாய். சாங்லி, சதாரா, கோலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கைவினைக் கலைஞர்களால் பல தலைமுறைகளாக தயாரிக்கப்படும் இந்த செருப்புகள், அதற்கான புவிசார் குறியீடு அடையாளத்தையும் பெற்றுள்ளது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியின் மிலன் நகரில், ஆண்கள் உபயோகிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான பேஷன் ஷோ சமீபத்தில் நடந்தது. இதில், சில ஆண்கள் கோலாப்பூர் செருப்புகளை அணிந்து வலம் வந்தனர்.

கோரிக்கை கடிதம்

இந்த செருப்புகளை, 'ப்ராடா' என்ற பன்னாட்டு நிறுவனம் சந்தைப்படுத்தியது. இந்த செருப்புகளுக்கு, 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோலாப்பூர் செருப்புக்கான உண்மையான அடையாளம் மறைக்கப்பட்டு, தங்கள் தயாரிப்பு போலவே அந்த நிறுவனம் சந்தைப்படுத்தியது, இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தங்கள் அடையாளத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோலாப்பூர் கைவினைக் கலைஞர்கள், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிசிடம் வலியுறுத்தியுள்ளனர். பா.ஜ., - ராஜ்யசபா எம்.பி., தனஞ்செய் மகாதிக் தலைமையிலான குழுவினர் முதல்வரை சந்தித்து கோரிக்கை கடிதத்தை அளித்தனர்.கண்டன குரல்கள் எழுந்துள்ளதை அடுத்து, தங்கள் சமூக வலைதளத்தில் இருந்து கோலாப்பூர் செருப்பு படங்களை, 'ப்ராடா' நிறுவனம் நீக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ganesun Iyer
ஜூன் 28, 2025 10:31

நல்லா தேடி பாருங்க.. நம்ம ஸ்டிக்கர் ஆளுங்க அந்த ப்ராடு கம்பெனில பார்ட்னரா இருப்பாங்க..


Ganesun Iyer
ஜூன் 28, 2025 10:28

"ப்ராடா" நிறுவனம் சரியான "ப்ராடு" நிறுவனம் போல இருக்கு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை