உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் முழு அடைப்பு

மணிப்பூரில் முழு அடைப்பு

இம்பால்: வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023ல் கூகி - மெய்டி சமூகத்தினரிடையே மோதல் வெடித்து, இனக்கலவரமாக மாறியது. இதில், 260-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து மோதல் நிலவிய நிலையில், மத்திய மாநில அரசுகளின் முயற்சியால் தற்போது கலவரம் கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில், கலவரம் துவங்கியதன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மெய்டி மக்கள் பெரும்பான்மையாக உள்ள இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் கூகி இனத்தவர் வசிக்கும் மலை மாவட்டங்களில் நேற்று முழு அடைப்புக்கு, அந்தந்த சமூகத்தினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்களும் குறைந்த அளவே இயங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை