உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு கண்டனம்

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில் பெட்ரோல்,டீசல் விலையை அம்மாநில காங்., அரசு திடீரென உயர்த்தியுள்ளதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இன்று வெளியிட்ட அறிவிப்பில், கர்நாடகாவில் பெட்ரோலுக்கான விற்பனை வரி 25.92 சதவீதத்திலிருந்து 29.84 சதவீதமாகவும், டீசலுக்கான விற்பனை வரி 14.03 லிருந்து 18.04 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக பெட்ரேல் லிட்டர் ஒன்று ரூ.3 க்கும், டீசல் லிட்டர் ஒன்று ரூ. 3.02 க்கும் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு இன்று(16.06.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அம்மாநிலஅரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tp8ynj7y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விலை உயர்வுக்கு அம்மாநில பா.ஜ,, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Gokul Krishnan
ஜூன் 15, 2024 21:24

இந்த உயர்வையும் ராவுல் வின்சி மற்றும் அவரது சகோதரியை முப்பது ரெண்டு பல்லை காட்டி அறிவிக்க செய்யலாமே


Balasubramanian
ஜூன் 15, 2024 21:13

விலை உயர்வுக்கு மத்திய அரசை அடிக்கடி குறை சொல்லும் மாநில அரசை மக்கள் புரிந்து கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு


chinnamanidhanabal
ஜூன் 15, 2024 20:51

இலவச திட்டங்களால் துவண்டு கிடக்கும் அரசின் நிதி நிலையை சீர்திருத்த, இது போன்ற தடாலடி அறிவிப்புகள் நிறைய வர வாய்ப்பு உள்ளது.


Duruvesan
ஜூன் 15, 2024 20:50

பாஸ் எல்லாம் பிரீ, இவனுங்க ஓட்டு வாங்க நம்ம தலைல, கருமம், இவனுங்க ஜெயிச்சு இருந்தா 1 லஷம் குடுத்து பெட்ரோல் விலை 150 ஆக்கி இருப்பானுங்க, கரண்ட் விலை பால் விலை எல்லாம் எதிட்டானுங்க


Ramesh Sargam
ஜூன் 15, 2024 20:37

மாநில அரசின் இந்த தில்லுமுல்லு தெரியாமல், மக்கள் விலை உயர்வுக்கு எப்பொழுதும்போல மத்திய அரசை, பிரதமரை குறைகூறுவார்கள். அறிவிலிகள்.


Kasimani Baskaran
ஜூன் 15, 2024 20:09

காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டால் வைத்து செய்வார்கள் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் - ஏனென்றால் காங்கிரஸ் கழக அடிமைகள் மூளைச்சலவை செய்வதில் வல்லவர்கள்.


Jai
ஜூன் 15, 2024 19:56

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 2000 கரண்ட் பில் தள்ளுபடி, மகளிருக்கு கர்நாடக முழுவதும் டவுன் பஸ் மற்றும் மப்சல் பஸ் இரண்டிலும் இலவச பயணம், பட்டதாரிகளுக்கு ரூ 3500 ஒவ்வொரு மாதமும்..... இப்படி பல இலவசங்களை அறிவித்து ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் அரசு. ஆகவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இது போன்ற விலை உயர்வை செய்ய வேண்டி உள்ளது. இலவச பணம் என்பது பெரிய அளவிலான மக்கள் தொகைக்கு கொடுக்கப்படும் பொழுது அது உண்மையில் மக்களுக்கு பிரயோஜனமாக இருக்காது. இந்தப் பணப்புழக்கத்தினால் வரும் பண வீக்கத்தில் கொடுக்கும் இலவச பணம் கரைந்து விடும். உதாரணமாக அரிசி எப்பொழுது இந்தியா முழுவதும் இலவசமாக கொடுக்கப்பட்டது அப்பொழுது பருப்பு விலை மூன்று மடங்காக அதிகரித்து பணப்புழக்கத்தை எடுத்துக் கொண்டது.


அப்புசாமி
ஜூன் 15, 2024 19:52

மத்த வகையில் வருமானம்.குறைஞ்சு போச்சு. அங்கே என்னடான்னா செல்போன் நம்பருக்கே கட்டணம் வசூலிக்கப்.போறாங்களாம். எல்லாம்.உருவல் மயம்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை