உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதுகாப்பில் உறுதி: இந்திய கடற்படையின் சிறப்பு பயிற்சியில் ராணுவம், விமானப்படை

பாதுகாப்பில் உறுதி: இந்திய கடற்படையின் சிறப்பு பயிற்சியில் ராணுவம், விமானப்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய கடற்படை சார்பில் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும்'டிராபெக்ஸ்' சிறப்பு பயிற்சி, இந்தியப்பெருங்கடலில் தொடங்கியுள்ளது. கடற்படை மட்டுமின்றி, ராணுவம், விமானப்படை, கடலோரக் காவல் படை பிரிவினரும் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.ட்ரோபெக்ஸ் பயிற்சி என்பது, இந்திய கடற்படையின் போர் திறன்களை சரிபார்ப்பதையும், கடல் சார் சூழலில் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேசத்தின் கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டு 'டிராபெக்ஸ்' ( Theatre Level Operational Exercise-- TROPEX) சிறப்பு பயிற்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு ஜன., முதல் மார்ச் 25 வரை இந்தியப் பெருங்கடலில் இப்பயிற்சி நடக்கிறது. சைபர் மற்றும் மின்னணு போர் நடவடிக்கைகள் , துப்பாக்கி சுடுதல் பயிற்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து துறைமுகம் மற்றும் கடல் பகுதிகளில் இப்பயிற்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தாமரை மலர்கிறது
பிப் 07, 2025 21:06

பிஜேபி அரசு தறிகெட்டு இருந்த இந்திய ராணுவத்தை உலகின் தலைசிறந்த ராணுவமாக மாற்றி அமைத்துள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை