உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூதாட்ட செயலிக்கு சச்சின் ஆதரவு டீப்பேக் வீடியோவால் குழப்பம்

சூதாட்ட செயலிக்கு சச்சின் ஆதரவு டீப்பேக் வீடியோவால் குழப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி, :'முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 'ஆன்லைன்' சூதாட்ட செயலிக்கு ஆதரவாக பேசும் விளம்பர 'வீடியோ' போலியானது' என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 'டீப்பேக்' எனப்படும் போலி வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன.மக்கள் செல்வாக்குமிக்க பிரபலங்களின் முகம், குரலை பயன்படுத்தி அவர்களை போலவே போலி வீடியோக்களை உருவாக்கி பரவ விடுகின்றனர்.நடிகை ராஷ்மிகா மந்தானா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் 'டீப்பேக்' வீடியோக்கள் சமீபத்தில் பரவியது.இந்த வரிசையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் போலி வீடியோ வேகமாக பரவி வருகிறது.'ஸ்கைவார்டு ஏவியேட்டர் குவெஸ்ட்' என்ற ஆன்லைன் சூதாட்ட செயலிக்கு ஆதரவாக சச்சின் பேசுவதை போன்ற விளம்பர வீடியோ சமீபத்தில் வெளியானது. 'இந்த விளையாட்டு செயலி வாயிலாக நீங்கள் அதிக பணம் சம்பாதிக்கலாம்' என சச்சின் அதை ஆதரித்து பேசும் காட்சிகளை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு விளம்பரங்களில் நடிக்கும் சச்சின் இந்த விளம்பரத்திலும் நடித்திருப்பாரோ என மக்கள் நினைக்கும் அளவுக்கு அந்த போலி வீடியோ பார்ப்பதற்கு மிக துல்லியமாக இருந்தது.சச்சின் டெண்டுல்கர் தன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு: என் உருவத்துடன் வெளியாகி இருக்கும் சூதாட்ட செயலி வீடியோ போலியானது. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது கவலை அளிக்கிறது. இதுபோன்ற வீடியோக்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜன 16, 2024 06:21

போலிகளை நம்பாதீர்கள்.


Kasimani Baskaran
ஜன 16, 2024 05:36

ஒரிஜினல் வீடியோவில் அதை மாற்ற முடியாத அளவில் பிளாக்செயின் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்றால் எதையும் அசல் எது மாற்றப்பட்ட நகல் எது என்பது புரிய முடியாத புதிராகிவிடும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை