உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., அமைச்சர்கள் திடீர் டில்லி பயணம்

காங்., அமைச்சர்கள் திடீர் டில்லி பயணம்

பெங்களூரு: லோக்சபா தேர்தல் குறித்து, ஆலோசனை நடத்தும் நோக்கில், கர்நாடக அமைச்சர்கள் டில்லி செல்கிறோம், என கலால்துறை அமைச்சர் திம்மாபுரா தெரிவித்தார்.லோக்சபா தேர்தலுக்கு, காங்கிரஸ் தயாராகி வருகிறது. கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில், காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாநிலத்தின் 28 லோக்சபா தொகுதிகளின் பொறுப்பு, சித்தராமையா அமைச்சரவையின், 28 அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் ஆலோசனை நடத்த, கட்சி மேலிடம் டில்லிக்கு அழைத்துள்ளதால், அமைச்சர்கள் டில்லிக்கு புறப்பட்டு சென்றனர்.கலால்துறை அமைச்சர் திம்மாபுரா உட்பட, சில அமைச்சர்கள் நேற்று இரவு 7:30 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் டில்லிக்கு சென்றனர்.அதற்கு முன், அமைச்சர் திம்மாபுரா கூறுகையில், கூடுதல் துணை முதல்வர்கள் நியமனம் குறித்து, கட்சி மேலிடம் முடிவு செய்யும். லோக்சபா தேர்தல் குறித்து, ஆலோசனை நடத்தும் நோக்கில், கர்நாடக அமைச்சர்கள் டில்லி செல்கிறோம், தேர்தல் திட்டங்கள் தொடர்பாக, மேலிடத்திடம் ஆலோசனை கேட்டறிவோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ