உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை தோற்கடிக்க காங்., சதி; ம.ஜ.த.,வின் நிகில் அலறல்

என்னை தோற்கடிக்க காங்., சதி; ம.ஜ.த.,வின் நிகில் அலறல்

ராம்நகர் ; ''என்னை தோற்கடிக்க மாநில அரசு சதி செய்கிறது. ஆனாலும் மக்கள் இம்முறை ஆசி வழங்குவர்,'' என, சென்னப்பட்டணா பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளர் நிகில் நம்பிக்கைத் தெரிவித்தார்.ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டணா தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நிகில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி:குமாரசாமி குடும்ப அரசியல் செய்வதாக, காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதை மாநில மக்கள் கவனத்து வருகின்றனர். எனக்கான தீர்ப்பை தொகுதி வாக்காளர்கள் தீர்மானிப்பர். வாக்காளர்களின் ஆசிர்வாதம் எனக்கு கிடைக்கும்.பிரசாரத்துக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. மக்களின் உற்சாகத்தை பார்க்கும்போது, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தேவகவுடா, குமாரசாமி செய்த பணிகளை, மக்கள் பேசுகின்றனர்.என்னை தோற்கடிக்க மாநில அரசு முயற்சிக்கிறது. இது தான் அவர்கள் கட்சியின் தேர்தல் வியூகம். நாம் நம் வேலையை செய்வோம். இன்று என் மனைவி ரேவதி, எனக்காக பிரசாரம் செய்துள்ளார். மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினார். பெண் ஆர்வலர்கள் வலியுறுத்தி, அவரை பிரசாரத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில்,நிகிலின் மனைவி ரேவதி, நகரின் பாலிடெக்னிக் கல்லுாரி, மகளிர் கல்லுாரி அருகே வாக்காளர்கள், மாணவர்களிடம் பிரசாரம் செய்தார். அப்போது மாணவர்கள், அவருடன் 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை