உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., வேட்பாளர்களை இறுதி செய்ய புதுடில்லியில் பிப்., 27ல் ஆலோசனை

காங்., வேட்பாளர்களை இறுதி செய்ய புதுடில்லியில் பிப்., 27ல் ஆலோசனை

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தயாரிக்க, வரும் 27 அல்லது 28ல் புதுடில்லியில் காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஏற்கனவே, ஒரு சுற்று ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது வேட்பாளரை இறுதி செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.இந்நிலையில், கர்நாடகா சட்டசபை கூட்டத்தொடர் நாளை முடிவடைகிறது. அன்றைய தினம் மாநில காங்., மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவின் மகன் திருமணமும் நடக்கிறது.எனவே, பிப். 27 அல்லது 28ல் புதுடில்லியில் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்ட அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. அப்போது வேட்பாளர் இறுதிப் பட்டியலை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட தீர்மானித்து உள்ளனர். அது தொடர்பான கூட்டங்களையும் இம்மாதத்துக்குள் முடிக்கவும் கட்சி மேலிடம் கூறியுள்ளது.வெற்றி பெற வாய்ப்புள்ள வேட்பாளர்கள் பற்றிய ஆய்வை, இந்த வாரத்துக்குள் முடிக்க உள்ளனர். அடுத்த வாரத்துக்குள், 28 தொகுதிகளின் ஆய்வு அறிக்கை தயாராகிவிடும். எனவே, இம்மாத இறுதியில் கூட்டம் நடத்தப்பட்டு, வேட்பாளர் பட்டியல் தயாரித்து, அகில இந்திய காங்கிரசின் மத்திய தேர்தல் குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ