உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., - எம்.எல்.சி., மீது மாண்டியா பா.ஜ., புகார்

காங்., - எம்.எல்.சி., மீது மாண்டியா பா.ஜ., புகார்

மாண்டியா, : சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, காங்கிரஸ் மூத்த எம்.எல்.சி., ஹரிபிரசாத் மீது மாண்டியாவில் புகார் செய்யப்பட்டுள்ளது.அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை, வரும் 22ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த நன்னாளுக்காக உலகே காத்திருக்கிறது.ஆனால், ராமர் கோவில் திறக்கப்படும் நாளன்று, கோத்ரா கலவரம் போன்று நடக்க வாய்ப்பு உள்ளது என்று காங்கிரஸ் மூத்த எம்.எல்.சி., ஹரிபிரசாத் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.இவரது பேச்சுக்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரை கைது செய்யும்படி, பலரும் வலியுறுத்துகின்றனர்.அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, மாண்டியாவில் பா.ஜ., தொண்டர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர்.'ஹரிபிரசாத்தின் பேச்சினால், ராமர் பக்தர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தை தீவிரமாக கருதி, அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்' என, பா.ஜ.,வினர் வலியுறுத்தி உள்ளனர்.அவரை கைது செய்யும்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை