மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
3 hour(s) ago | 10
பெங்களூரு, : “ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி வேட்பாளர் குபேந்திர ரெட்டிக்கு ஓட்டுபோடும்படி, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களுக்கு மிரட்டல் விடுவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்து உள்ளேன்,” என, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கானிகா கூறி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் குபேந்திர ரெட்டி, அவரது மகன், ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலர், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களிடம், 5 கோடி முதல், 10 கோடி ரூபாய் வரை தருவதாக பேரம் பேசுகின்றனர்.'குபேந்திர ரெட்டிக்கு ஓட்டு போட வேண்டும். இல்லாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்' என அவர்கள் மிரட்டுகின்றனர். இதுகுறித்து விதான் சவுதா போலீசில் புகார் அளித்துள்ளேன். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் கவனத்திற்கும் கொண்டு சென்று உள்ளேன்.எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி, சபாநாயகர் காதரிடமும் முறையிட்டு உள்ளேன். திங்கட்கிழமையும் சட்டசபை கூட்டம் நடக்கிறது. ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போடுவதைத் தடுக்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை ரிசார்ட் அழைத்துச் செல்வதாக, தகவல் வெளியாகி உள்ளது.நாங்கள் யாரும் ரிசார்ட் செல்லவில்லை. நான் கட்சியின் ஒழுக்கமான சிப்பாய். என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. எங்கள் எம்.எல்.ஏ.,க்களை கட்சி பாதுகாக்கும்.மாண்டியா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக, ஸ்டார் சந்துருவை அறிவிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. நேரம் குறைவாக உள்ளது. எட்டு தொகுதிகளை அவர் சுற்றி வர வேண்டும். எனது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஸ்டார் சந்துரு எம்.பி., ஆவது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 10