உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரெய்டுக்கு ஆள் அனுப்பிவிட்டு நன்கொடை வசூலிப்பதாக பா.ஜ., மீது காங்., குற்றச்சாட்டு

ரெய்டுக்கு ஆள் அனுப்பிவிட்டு நன்கொடை வசூலிப்பதாக பா.ஜ., மீது காங்., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தனியார் நிறுவனங்களிடம் இருந்து பா.ஜ.,வுக்கு நன்கொடை வசூலிப்பதற்காக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

விசாரணை

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:கடந்த, 2018 - 19 மற்றும் 2022 - 23 காலகட்டத்தில் மத்திய விசாரணை அமைப்புகளால் நடவடிக்கைக்கு ஆளான 30 தனியார் நிறுவனங்கள், அதே காலகட்டத்தில் பா.ஜ.,வுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளன. பா.ஜ.,வின் நிதிநிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வருமானால், நன்கொடை எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவல்கள் மட்டுமின்றி, மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி, பெரு நிறுவனங்கள் எவ்வாறு மிரட்டப்பட்டு நன்கொடை வசூலிக்கப்பட்டன என்பது வெளிச்சத்துக்கு வரும். மறைப்பதற்கு ஒன்று மில்லை எனில், பா.ஜ.,வின் கருவூலம் எவ்வாறு நிரம்பியது என்பதை காலவரிசையுடன் விளக்கிட தயாரா?

சோதனை

அதற்கு தயாராக இல்லை எனில், இந்த நன்கொடை குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு ஆஜராக தயாரா?இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்., பொது செயலர் கே.சி.வேணுகோபால் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மூன்று முக்கியமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.சில தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., சோதனை நடந்த பின், அந்நிறுவனங்கள் பா.ஜ.,வுக்கு நன்கொடை அளித்துள்ள தகவல் ஊடக செய்தி வாயிலாக வெளிவந்து உள்ளது. அந்த செய்தியின் உண்மைத்தன்மை, தேர்தல் கமிஷன் ஆவணங்கள் வாயிலாக நிரூபணமாகி உள்ளன.இது, அந்த மூன்று மத்திய விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக இயங்குவதை கேள்விக்குள்ளாக்கி உள்ளன.இந்த மூன்று விசாரணை அமைப்புகளில் இரண்டு, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. விசாரணை அமைப்புகள் மத்திய அரசால் இயக்கப்படுகின்றன என்பது இந்த நாட்டுக்கே நன்றாக தெரியும்.இது தொடர்பாக நீதிமன்றத்தையும், மக்களையும் நாடப்போகிறோம். இரண்டு இடங்களிலுமே உங்களை நாங்கள் தோற்கடிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 24, 2024 12:42

முழு உண்மை ...... அன்று நீங்கள் (காங்கிரஸ்) செய்த அனைத்தையும் அப்படியே இன்று இவர்கள் (பாஜக) செய்கிறார்கள் ....


Indian
பிப் 24, 2024 09:56

மாடர்ன் திருடர்கள்


Sampath Kumar
பிப் 24, 2024 09:53

இந்த பிஜேபி கும்பல் லன்சதையே சட்டம் ஆகி இதன் மூலம் கோடி கோடியாக கொள்ளை அடித்து உள்ளார்கள். ஊழலை ஒழிப்போம் என்று பொய் சொல்லி வோட்டு பிச்சை எடுக்கும் இந்த அடாவடி பொய் சொல்லி கட்சியை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள் தேர்தலில் அதை காட்டுவார்கள்.


ராஜா
பிப் 24, 2024 11:20

ஆமா டாஸ்மாக் காசை நேரடியாக அறிவாலயம் கொண்டு வர முடியாமல் வங்கி பாத்திரங்களாக கேட்கிறார்கள். அந்த தகவல்கள் வேறு வங்கி தணிக்கையில் வருமான வரிதுறைக்கு போய் விடுகிறது.


M Ramachandran
பிப் 24, 2024 09:43

பல்லு போனா கிளங்கள். குடும்ப ஆட்சியய் எதிர்த்து பேச வாய் இருக்கா.


J.V. Iyer
பிப் 24, 2024 06:56

இவர்களும் என்னவெல்லாமோ குற்றச்சாட்டு வைக்கிறார்கள். எதுவும் எடுபடவில்லை. கருமாந்திர கட்சி. மஞ்சள்காமாலை வந்தவனுக்கு எல்லாம் மஞ்சளாகத்தானே தெரியும்?


Velan Iyengaar
பிப் 24, 2024 13:07

இது குற்றசாட்டா இல்லை குற்றம் தானா என்பது சீக்கிரம் வெளியே தெரிந்துவிடும் எதிர்க்கட்சிகள் இதை அப்படியே சுலபமாக விட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா??


ராஜா
பிப் 24, 2024 06:36

மாடியில் சீட் பேரம் கீழே ரெய்டு அப்படியா?


பேசும் தமிழன்
பிப் 24, 2024 00:58

முன்பு அறிவாலயத்தில் சீட் பேரம் நடக்கும் போதே....சிபிஐ சோதனை நடத்தி.... சீட் எண்ணிக்கையை அதிகரிக்க செய்தது உங்கள் கட்சி.... எல்லோரையும் உங்களை போல் நினைக்க வேண்டாம்.


Jay
பிப் 24, 2024 00:55

இவர் என்ன அறிக்கைகள் விட்டாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை நம்முடைய பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு தடையை கொண்டு வந்தவன இவனதான்


Ramesh Sargam
பிப் 24, 2024 00:41

இவர்கள் மத்திய அரசின் மீது இல்லாதது, பொல்லாது கூறி காலத்தை ஓட்டுகின்றனர். இப்படி புலம்பி புலம்பியே இவர்கள் வாழ்க்கை ஒரு பயனுமில்லாமல் கழிகிறது.


Velan Iyengaar
பிப் 24, 2024 13:05

மார்ச் 13 ஆம் தேதி ஒரு சுமாருக்கு இது வெளியே வந்துவிடும்.. அதுக்கு அப்புறம் உச்சநீதிமன்றத்துல கண்காணிப்பில் விசாரணை கோரி ஒரு பொதுநல வழக்கு போட்டு மீதி மானத்தை வாங்கும் காலம் விரைவில்


தாமரை மலர்கிறது
பிப் 23, 2024 23:42

பிஜேபி மிக நன்றாக ஆட்சி செய்வதால், தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி மிக அபிமிர்தமாக உள்ளது என்று அவர்கள் கருதுவதால், பிஜேபி கட்சிக்கு அவர்கள் அள்ளிஅள்ளி தருகிறார்கள். காங்கிரஸ் க்கு கிள்ளி கிள்ளி தருகிறார்கள். பொறாமையால் ஜெய்ராம் ரமேஷ் பொருமுகிறார். இதற்கு பிஜேபி என்ன செய்ய முடியும்? நீங்கள் நன்றாக ஆட்சி செய்திருந்தால், இந்த நிலைமை உங்களுக்கு ஏற்பட்டு இருக்குமா?


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 24, 2024 12:48

பிஜேபி நன்றாக ஆட்சி செய்கிறது என்று தனியார் நிறுவனங்கள் கருதுவதால் அவர்கள் பாஜகவுக்கு அள்ளிஅள்ளி தரவில்லை ..... ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தை தங்களது நிறுவனங்களுக்குச் சாதகமாக வளைக்க உதவுவார்கள் (வரி ஏய்ப்பு அல்லது குறைந்த பட்சம் வரிச்சலுகை, கடன் தள்ளுபடி, விதி மீறிய இறக்குமதி / ஏற்றுமதி முதலான விஷயங்களில்), என்பதால் பாஜகவுக்கு அள்ளிஅள்ளி தருகிறார்கள் .....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை