உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 15 ஆண்டுகளில் காங்கிரஸ், பா.ஜ.,; வளர்ந்தது யார்? விழுந்தது யார்?

15 ஆண்டுகளில் காங்கிரஸ், பா.ஜ.,; வளர்ந்தது யார்? விழுந்தது யார்?

புதுடில்லி: இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை லோக்சபா தேர்தல் நடைபெறுவது போல, அந்தந்த மாநிலங்களிலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் தேசிய கட்சிகளில் பிரதானமாக பார்க்கப்படும் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடந்த 15 ஆண்டுகளில் எந்தளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளன என்பது பற்றிய புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளது.

2009

2009ல் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் மட்டும் 13 மாநிலங்களில் ஆட்சியில் இருந்து வந்தது. அதன் கூட்டணி கட்சிகளான திமுக (தமிழகம்), ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (ஜார்க்கண்ட்), தேசிய மாநாட்டு கட்சி (ஜம்மு காஷ்மீர்) மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்து வந்தது. அப்போது ஆறு மாநிலங்களில் பா.ஜ., தலைமையிலான ஆட்சியும், பஞ்சாப், பீஹாரில் பா.ஜ.,வின் கூட்டணி ஆட்சியும் இருந்தது.

2014

அதுவே 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் வெற்றிப்பெற்ற மோடி, பிரதமராக பொறுப்பேற்றபோது, காங்கிரஸ் வசம் 9 மாநிலங்களும், அதன் கூட்டணி கட்சிகள் வசம் 3 (ஜம்மு காஷ்மீர், பீஹார், ஜார்க்கண்ட்) மாநிலங்களும் ஆட்சியில் இருந்தன. அந்த நேரத்திலும் பா.ஜ., வசம் 6 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. அதன் கூட்டணி கட்சிகள் 4 மாநிலங்களில் ஆட்சி புரிந்தன.

2019

அடுத்து படிபடியாக பா.ஜ.,வின் வளர்ச்சி மேலோங்க, காங்கிரஸ் வசமிருந்த மாநிலங்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியது. 2019ல் மோடி 2வது முறையாக பொறுப்பேற்றபோது, பா.ஜ., 10 மாநிலங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 9 மாநிலங்களிலும் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தது. காங்கிரஸ் வெறும் 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்தது. அதன் கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் ஆட்சியை இழந்திருந்தன.

2024

தொடர்ந்து இறங்குமுகமாக இருந்த காங்கிரஸ், 2024ல் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து 'இண்டியா' எனும் கூட்டணியை உருவாக்கியது. அதன் வாயிலாக தற்போது இண்டியா கூட்டணி 7 மாநிலங்களில் ஆட்சியில் இருந்து வருகிறது. மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அதுவே பா.ஜ., 12 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. 8 மாநிலங்களில் பா.ஜ., கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது.

சுருக்கமாக...

புள்ளிவிபரங்களை பார்க்கையில் 2009 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சியே மேலோங்கி உள்ளது. காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த தயவில் தற்போது சில மாநிலங்களில் மீண்டும் கால் பதித்துள்ளது தெரியவருகிறது. அதாவது, * 2009ல் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என மொத்தம் 8 மாநிலங்களிலும், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என மொத்தம் 16 மாநிலங்களிலும் ஆட்சி செய்திருந்தது.* 2014ல் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்தது. * 2019ல் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது; காங்., வெறும் 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்திருந்தது. * 2024ல் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என மொத்தம் 20 மாநிலங்களிலும், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என மொத்தம் 10 மாநிலங்களிலேயே ஆட்சி செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

RAMAKRISHNAN NATESAN
அக் 09, 2024 22:52

நேரு, இந்திரா ஆகியோர் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சியின் தலைவர்கள் என்று நம்பி கல்வியறிவில்லாத மக்கள் தொடர்ந்து காங்கிரசைத் தேர்ந்தெடுத்து வந்தனர் .... பிறகு ஒரு கட்டத்தில் அக்கட்சியும், அதன் தலைவர்களும் ஊழலில் திளைத்தவர்கள் என்றும், அக்கட்சி ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் புரியவந்தது ..... மக்களும் அரசியல் அறிவு, கல்வியறிவு பெற்றதனால் காங்கிரசுக்கு எதிரான மனநிலைக்குத் திரும்பினர் .... இதுதான் யதார்த்தம் ..... இதை மறந்துவிட்டு பாஜக தேர்தலில் மோசடி செய்கிறது, மாற்றுக்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறது என்றெல்லாம் பேசுவது மேலும் மேலும் பாஜகவை வளர்க்கும் ..... மக்கள் கொடுக்கும் தீர்ப்புகளுக்குத் தலைவணங்கவேண்டும் .....


கல்யாணராமன்
அக் 09, 2024 18:03

1967ல் தமிழ்நாட்டில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி மீண்டும் அதை மீட்டெடுக்க கடுகளவு கூட முயற்சி செய்யாமல் தங்களை தோற்கடித்த திமுகவிடமே சரண்டர் ஆகி அவர்கள் போடும் சில சீட்டுகளை பொறுக்கிகொண்டு பதவி சுகம் அனுபவிக்கின்றனர் முன்னணி தலைவர்கள். பா சிதம்பரம், ஈ வி கே எஸ் இளங்கோவன், கே வி தங்கபாலு, இப்போது 5 கட்சி தாவி செல்வ பெருந்தகை உள்பட யாருக்கும் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதோ ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதிலோ சற்றும் அக்கறை இல்லை. தனக்கும் தன் வாரிசுக்கும் பதவி கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். பீட்டர் அல்போன்ஸ் தனிரகம் திமுகவின் கருணாநிதியின் துதி பாடிக்கொண்டே காங்கிரசில் காலக்ஷேபம் செய்கிறவர்.


M Ramachandran
அக் 09, 2024 16:44

இந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு நாட்டு பற்று வேண்டும். எப்போதும் எதிராளிகள் மேல் அடுக்கடுக்காக பொய் குற்ற சாட்டுக்கள் வைத்தால் மக்கள் நம்ப மாட்டார்கள். தங்கள் நடந்து பாதையை மறந்து விடக்கூடாது. மக்கள் மறந்து விடமாட்டார்கள். ஓட்டுக்காக வந்தேரி சமூகத்தை மகிழ்விக்க சனாதன மததை இழிவு வாகா பேச கூடாது. தன சொந்த சுய நலத்துக்கு நம் பகைய்ய நாட்டுடன் கை கோர்த்து நம் நாட்டிற்கு எதிராகவும் இழிவு படுத்தியும் நம் நாட்டின் உண்மையானா பொருளாதாரத்தை குறைத்து பேசக்கூடாது. இன்னும் திருந்த வில்லை என்றால் மக்கள் நிச்சயம் திருத்து வார்கள்


raja
அக் 09, 2024 16:39

கான் கிராஸ் இல்லாத இந்தியா ஒரு வல்லரசாகும்....


Jagadeesan gopalaswamy naidu
அக் 09, 2024 16:23

Congress is like corporate company Tamil nadu the criminal is Congress leader , Mrs .Indira Gandhi dynamic leader , presently no good leaders in congress, counterbalance is important, Mr.Raghul is not able lead India, Time was over , Modejee is ground level cadre and understand Indian politics and dynamics.Mr.Nrashimha Rao is a great person , Singh is puffet


Sathyanarayanan Sathyasekaren
அக் 10, 2024 16:55

Mr. Jagadeesan cannot agree to Indira fake gandhi is a dynamic leader. she did many blunders and missed many opportunities to solve the POK issue. we won 3 wars still we left our land in the hands of Pakistan. Giving away katchatheevu another big blunder, how one the international border without any foreseeing? when pakistan surrendered in bangladesh war, she should have bargained to release our solders / asking Pakistan to leave from POK.


Ramaswamy Jayaraman
அக் 09, 2024 16:08

காங்கிரஸ் பலவீனமானது, இன்றல்ல. முதல் முதலில் காங்கிரஸ் என்று பிளவுபட்டதோ அன்றில் இருந்து இன்றுவரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்று அல்லது பாலவோ என காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்திவிட்டார்கள். பழைய நிலைமைக்கு காங்கிரஸ் வரவே வராது


Jagadeesan gopalaswamy naidu
அக் 09, 2024 16:24

true


Oru Indiyan
அக் 09, 2024 15:25

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன காங்கிரஸ்


google
அக் 09, 2024 15:23

Dinamalar. nee thaan


SUBBU,MADURAI
அக் 09, 2024 15:36

Duplicate Gandhi tried to sell duplicate Jelabi to Haryana voters Haryana voters kicked him out!


SUBBU,MADURAI
அக் 09, 2024 15:43

Media Narratives Phase 1, Jats are Angry Phase 2, Muslims are Angry Phase 3, Yadavs are Angry Phase 4, Armymen are Angry Phase 5, Pehalwan are Angry Phase 6, Farmers are Angry Phase 7,Party Workers are Angry, Exit Polls, Voters are Angry. Results - Public is happy


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை