உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழிலதிபர் மனைவியுடன் தற்கொலை: அமலாக்கத்துறை மீது காங்கிரஸ் புகார்

தொழிலதிபர் மனைவியுடன் தற்கொலை: அமலாக்கத்துறை மீது காங்கிரஸ் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேசத்தில் தொழிலதிபர் ஒருவர், தன் மனைவியுடன் தற்கொலை செய்துஉள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், அமலாக்கத் துறை மற்றும் பா.ஜ., நிர்வாகிகளின் நெருக்கடி காரணமாகவே தற்கொலை முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.

சமூக வலைதளம்

இங்குள்ள சேஹோர் மாவட்டம் அஸ்தா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் பார்மர், அவரது மனைவி நேஹா நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இந்நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து மனோஜ் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானது.ஜனாதிபதி, பிரதமர், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோருக்கு எழுதிய அந்தக் கடிதத்தில், அமலாக்கத் துறை மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் நெருக்கடியால் தற்கொலை செய்வதாக கூறியுள்ளார். தன் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும்படி, ராகுலுக்கு அவர் அந்தக் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அந்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக தொழிலதிபர் மனோஜ் பார்மர் குடும்பத்தாரிடம் விசாரித்த பின், அதன் உண்மைத் தன்மை தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, காங்., மாநிலத் தலைவர் ஜிது பட்வாரி கூறியதாவது:காங்கிரஸ் மக்களுக்கான கட்சி. மக்களின் நலனுக்காக நாங்கள் செயல்படுகிறோம். அதனால்தான், அவர் கடிதத்தில், தன் குழந்தை களை பார்த்து கொள்ளும்படி, ராகுலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தற்கொலை அல்ல. மாநில அரசால் நிகழ்த்தப்பட்ட கொலை. பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் அமலாக்கத் துறையின் நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்துள்ளார்.மனோஜ் பார்மர், காங்கிரஸ் அனுதாபி. ராகுல், பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டபோது, அவருடைய குழந்தைகள், தாங்கள் சேமித்த உண்டியலை ராகுலிடம் கொடுத்தனர். இதனால்தான், பா.ஜ., நிர்வாகிகள் அவருக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

நெருக்கடி

காங்., கைச் சேர்ந்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வர், கமல்நாத் வெளியிட்ட அறிக்கையில், 'அமலாக்கத்துறை மற்றும் பா.ஜ.,வின் நெருக்கடியே மனோஜ் மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.'இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இதற்கு, மத்திய பிரதேச பா.ஜ., ஊடகப் பிரிவு தலைவர் ஆஷிஷ் அகர்வால் மறுப்பு தெரிவித்து, “காங்கிரஸ் ஒரு பிணந்தின்னி கழுகு. ஒருவருடைய மரணத்திலும் அக்கட்சி அரசியல் செய்கிறது.''வழக்கின் பின்னணி தெரியாமல், பொய்யான பிரசாரம் செய்வது காங்.,கின் வாடிக்கை,” என, அவர் கூறியுள்ளார்.

அமலாக்கத்துறை விளக்கம்!

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்தி:மனோஜ் பார்மர், பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் முதல்வரின் இளைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 6 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால், குறிப்பிட்டபடி, அவர் தொழிலைத் துவங்காமல், அந்த நிதியை, தன் சொந்த நிறுவனத்துக்கு மாற்றியுள்ளார். மேலும், தன் குழந்தைகள் பெயரில் சொத்துக்களாக வாங்கியுள்ளார்.இந்த மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. அதனடிப்படையில் இதில் நடந்துள்ள பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, மனோஜ் பார்மர் உள்ளிட்டோரின் வீடுகளில் சமீபத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

jayvee
டிச 15, 2024 12:30

அனால் ஒன்று உண்மை.. gst மற்றும் சுங்க ஆயத்தீர்வை அலுவலகங்களும் அதிகாரிகளும் மாநில லஞ்ச ஊழல்வாதிகளுக்கு சளைத்தவர்கள்ல.. நிர்மலா சீதாராமன் தன்னை ஒரு பள்ளிக்கூட பிரின்சிபால் போல நினைப்பது சரி என்றால் அவர் கீழ் பணிபுரியும் முரட்டு லஞ்ச பேர்வழிகளை கட்டுப்படுத்த துறையின் பல்வேறு நடைமுறைகளை மாற்றவேண்டும்.. தேவை என்றால் வெள்ளைக்காரன் சட்டம் இல்லயென்றால் பிஜேபி யின் திட்டம் என்று அடாவடியாக இருக்கும் பிஜேபி நடுநிலையாக சிந்திக்க கற்கவேண்டும்.. ஒவ்வொருமுறையும் மோடியின் முகம் செல்லுபடியாகாது ..கடந்தமுறையே பெரிய தடுமாறம்தான் .. பத்துவருஷம் கழிந்த பிறகு எந்த முகாந்திரமும் இல்லாமல், துறையிடம் வியாபாரி குற்றமற்றவர் என்று போதிய ஆதாரம் இருந்தபின்னரும் வியாபிரியிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஆணை அனுப்பும் அதிகாரிகளுக்கு யார் அந்த உரிமையை வழங்கியது ? GST அதிகாரிகள் ஒருபுறம் மாநில சேல்ஸ் tax அதிகாரிகள் மறுபுறம் என்று கொள்ளையும் தொல்லையும் தொடர்கிறது


Nandakumar Naidu.
டிச 15, 2024 11:53

காங்கிரஸ் காரர்களே தற்கொலைக்கு தூண்டி விட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது.


AMLA ASOKAN
டிச 15, 2024 10:51

தற்கொலை செய்துகொண்டவர் கடிதம் எழுதாமல் சென்றிருந்தால் , இந்த பழி காங்கிரஸ் மீது விழுந்திருக்கும் . அவர் களயதார்த்தத்தை தான் கூறியுள்ளார் . போபாலில் இறந்தவர்கள் மீது அனுதாபத்திற்கு பதிலாக பல்வேறு புதிய கோணங்களில் விமர்சனங்கள் எழுதப்படுவது புதிதாக உருவாகிவரும் அரசியல் கண்ணோட்டம். ஒரு உயிரின் விலை ஒரு தம்பிடிக்கும் குறைவு என புலப்படுகிறது .


ஆரூர் ரங்
டிச 15, 2024 10:24

சொக்கத்தங்க குடும்ப உறவுகளில் பலர் தற்கொலை உள்ளிட்ட இயற்கைக்கு மாறான சந்தேக மரணங்களை அடைந்துள்ளனர். பிஜெபி அதனை பெரிதுபடுத்தியதில்லை.


அப்பாவி
டிச 15, 2024 09:22

இது வெளிநாட்டு டீப் ஸ்டேட் சதி. இப்பிடி சொல்வதுதான் ஃபேஷன்.


வைகுண்டேஸ்வரன், chennai
டிச 15, 2024 09:33

டேய் அப்பாவி 200 ரூவா. உன் டீம்ல சொல்லி அவங்க குடும்பத்தை பாத்துக்க முடியும். இங்க கூவுரத விட்டுவிட்டு மொதல்ல அதை செய்


வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 11:23

வைகுண்டேஸ்வரன் என்ற என் பெயரில், இன்று காலை இங்கே ஒருத்தன் ஒரு ஐ டி உருவாக்கியிருக்கிறான். அநேகமாக பாஜக ஆதாரவாளனா இருக்க வேண்டும். என் பேரைப் பார்த்தலே அவனுங்களுக்கு ச்சும்மா அதிருதில்ல????


GMM
டிச 15, 2024 08:43

6 கோடி கடன் பெற்று மோசடி செய்தால், விசாரணை அமைப்புகள் வழக்கு பதிவு செய்து விசாரிக்கும். ராகுல் இவ்வளவு நெருக்கம் என்றால், 6 கோடி ராகுலிடம் பெற்று கடனை அடைக்க முடியும் . குழந்தை உள்ள பெற்றோர் நெருக்கடிக்கு அஞ்ச மாட்டார்கள். அழகிய குடும்பம். தற்கொலைக்கு காரணம் எதுவாக இருந்தாலும், குழந்தை பராமரிப்பு பெற்றோர் கடமை. குழந்தையை பார்த்து பராமரிப்பது மிக கடினம். 24 மணி நேரம் கவனிக்க வேண்டும் . தூக்கம் , கேளிக்கை , ஆசையை, துறக்க வேண்டும். ராகுல் ஒரு விளையாட்டு பிள்ளை. அவரிடம் ஒப்படைக்க கூடாது. அவர் பொறுப்பு எடுக்க மாட்டார். ? நீதி கோரிக்கையை ஏற்றால், தற்கொலை செய்பவர்களால் நாளை திராவிடம், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பிரச்னை வரும்.


Thiru
டிச 15, 2024 08:20

நீங்க இப்ப அதானிக்கு தருவது என்னவாம்.. ராகுல் சோனியா நம்ம நாட்டை சூறை ஆட போடும் கணக்கு


VENKATASUBRAMANIAN
டிச 15, 2024 08:16

உடனே ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் பிண்ணனி தெரியாமலே விவாதம் நடத்துவார்கள்.


Kalyanaraman
டிச 15, 2024 07:47

தன் கட்சியையே காப்பாற்ற முடியாதவன், அடுத்தவன் குழந்தைகளை காப்பாற்ற போறானா?


R Dhasarathan
டிச 15, 2024 07:42

பல தொழிலதிபர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி விட்டது, நானும் பலமுறை முயன்று உள்ளேன். வேறு வழியின்றி எப்படியேனும் முன்னேற வேண்டும் என்று உழைத்து வருகிறோம். அரசினால் எங்களைப் போன்ற சிறு குறு நிறுவனங்களுக்கு எந்த பயனும் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை