உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாட்ஸாப் செய்திக்கு காங் ., கண்டனம்

வாட்ஸாப் செய்திக்கு காங் ., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை கோரி, 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பப்படும் குறுஞ்செய்திக்கு, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.வாட்ஸாப் சமூக ஊடகத்தை பயன்படுத்துவோரின் எண்ணுக்கு நேற்று முன்தினம் முதல், 'விக் ஷித் பாரத் சம்பார்க்' என்ற பெயரில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படுகிறது. இதில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து பொது மக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை தெரிவிக்கும்படி கோரப்பட்டுள்ளது. அதனுடன், பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. அதில், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பிரதமர் விரிவாக விவரித்துள்ளார். இதற்கு, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, கேரள காங்., வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:பொது மக்களிடம் கருத்து கேட்க அந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கடிதம், முற்றிலும் தேர்தல் பிரசாரமாக உள்ளது. வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கான பிரதமரின் பிரசாரமாகவே அந்த கடிதம் உள்ளது. அரசியல் பிரசாரங்களுக்கு வாட்ஸாப் சமூக ஊடகத்தை பயன்படுத்தக் கூடாது என, அந்நிறுவனம் கொள்கை வகுத்துள்ளது. அப்படி இருக்கையில், இந்த பிரசார செய்தியை பகிர எப்படி அனுமதித்தீர்கள்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M Ramachandran
மார் 18, 2024 12:23

இதில் என்னா தவறு நிஜமாக இருந்தால் மக்கள் எடுத்து கொள்ளா போகிறார்கள் இல்லையென்றால் புறம் தள்ளிவிடுவார்கள் . குற்றமுள்ள நென்ஜம் குத்துதா? எதாவாது நல்லதாகா சிந்திக்கவும்.


karthik
மார் 18, 2024 08:44

செய்ததை சொல்வதில் உங்களுக்கு என்னடா பிரச்சனை? மக்களிடம் நேரடியாக கருத்து கேட்பது தவறொன்றும் இல்லை..நீங்கள் மேடையில் பேசும் பொய்களை நம்பவேண்டுமா?


Ramesh
மார் 18, 2024 08:19

ஏன் எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அவர்கள் கொடுத்த வாக்குறுதி என்ன நிறைவேற்றியது என்ன அமல்படுத்திய நலதிட்டங்கள் என்ன என்பதை கைபேசியில் வெளியிடலாமே? யார் தடுக்க போகிறார்கள்? உருப்படியா ஒன்றும் தேறாது என்கிற பயமா?


பேசும் தமிழன்
மார் 18, 2024 08:05

தோல்வி பயத்தில் கண்டபடி உளற கூடாது.... அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் !!! தோல்வி பயம் உங்களை இப்படி பேச வைக்கிறது.


Oviya Vijay
மார் 18, 2024 08:04

தேவையில்லாத ஆணி... வாட்ஸாப்ல இவரோட மெசேஜ் இன்னைக்கு காலைல வந்ததும் பிளாக் பண்ணிட்டேன்... என்னோட Permission இல்லாம என்னோட வாட்ஸாப்ப்க்கு மெசேஜ் அனுப்ப இவருக்கு யாரு Rights கொடுத்தாங்களோ...


Parthasarathy Badrinarayanan
மார் 18, 2024 05:44

கம்யூனிஸ்டுகளின் அடிமை கேரள காங்கிரஸ் இப்படித்தான் உளறும்


Ramesh Sargam
மார் 18, 2024 05:25

காங்கிரஸ் கட்சியினரிடம் எந்தவொரு மக்கள் நலத்திட்டமும் இல்லை. இருந்தாலும் ஆட்சி அமைத்தால் ஒன்றையும் செயல்படுத்தமாட்டார்கள். ஊழல் மட்டும்தான் செய்வார்கள். ஆகையால்தான் எதிர்க்கிறார்கள்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ