உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்ச்சையை எழுப்பிய 2020 டில்லி படம்; வெளியீட்டை நிறுத்த காங்., கோரிக்கை

சர்ச்சையை எழுப்பிய 2020 டில்லி படம்; வெளியீட்டை நிறுத்த காங்., கோரிக்கை

புதுடில்லி: டில்லியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு 2020ல் நடந்த கலவரங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட '2020 டில்லி' திரைப்படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க தேர்தல் கமிஷனை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.டில்லியின் வடகிழக்கு பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த 2020ல் போராட்டம் நடந்தது. அப்போது, இரு சமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. பிப்.,23 - 26 வரை நடந்த கலவரம் மற்றும் போராட்டத்தில் வீடுகள், கடைகள் தீ வைக்கப்பட்டன; பல்வேறு தரப்பினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இதில் 53 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து '2020 டில்லி' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இது, அடுத்த மாதம் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லி சட்டசபைக்கு பிப்., 5ம் தேதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த படத்தின் வெளியீட்டை நிறுத்தும்படி தேர்தல் கமிஷனை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக சிங்வி நேற்று கூறியதாவது:

சட்டசபை தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இது தற்செயலான நிகழ்வாக தெரியவில்லை. இந்த படத்தை வெளியிட்டால், அது தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். ஓட்டு சதவீதத்தையும் பாதிக்கும். அதேசமயம், வாக்காளர்களை நேரடியாக பாதிக்கும். ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக பிரசாரங்கள் கிளம்பும். ஆகவே, இந்த படத்தின் வெளியீட்டை தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.இந்த படத்தை தேர்தல் சமயத்தில் வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதிக்கும் என நம்புகிறோம். அதையும் மீறி வெளியிடப்படுவது தேர்தலின் நியாயத்தையும், வெளிப்படைத் தன்மையையும் குப்பைத் தொட்டியில் வீசுவதற்கு சமம். இந்த படத்தை வெளியிட்டு அரசியல் செய்யும் வேலையில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. 2019ல் பொது தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தை அக்கட்சி வெளியிட்டது. இப்போதும், அது போன்ற செயலில் ஈடுபட்டு சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த பா.ஜ., முயல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ஆரூர் ரங்
ஜன 27, 2025 16:21

அமெரிக்கா கள்ளக்குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது . நமது நாட்டில் அதே காரணத்துக்காக சிஏஏ கொண்டுவரப்பட்டால் பல போலி சிறுபான்மையினருக்கு எரிகிறது.


Rajasekar Jayaraman
ஜன 27, 2025 14:25

நாட்டு பிரிவினைவாதிகள் பிரிவினையை பற்றி பேசக்கூடாது வித்திட்டதே இந்த பாரத பொருளாதார கொள்ளையர்கள் தான்.


Bahurudeen Ali Ahamed
ஜன 27, 2025 12:43

ஒரு குற்றம் அல்லது நிகழ்வு நடக்கும் எனில் இரண்டு பக்க நியாய அநியாயத்தை எடுத்துக்காட்டவேண்டும் ஆனால் ஒரு சமூகத்தை தவிர்த்து அல்லது விடுத்து மற்றோர் சமூகத்தை மட்டும் குற்றவாளியாக காட்டும் காட்சிகளை சேர்த்து படம் எடுத்திருக்க வாய்ப்புள்ளது, ஆகையால் தேர்தல் பரப்புரையாக ஒருபக்க சார்புடையதாக வரும் திரைப்படத்தை தேர்தலுக்கு பின்தான் அனுமதிக்கவேண்டும்


Gopalakrishnan Balasubramanian
ஜன 27, 2025 11:50

குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக பிரச்சாரம் கிளம்பும் என்று எப்படி சொல்கிறார்


K Subramanian
ஜன 27, 2025 11:34

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பு ஆகின்றது


sankaranarayanan
ஜன 27, 2025 10:48

அடுத்த மாதம் 2ம் தேதி அந்த படம் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஆட்சேபனை இருந்தால் வெளியாகும் தினத்தை சற்றே முன் கூட்டியே ஒருவாரம் முன்பே வெளியிடலாமே அதில் ஒன்று தவறில்லை நடந்ததைத்தான் வெளியிடுகிறார்கள்.


Nagarajan D
ஜன 27, 2025 09:42

அடேய் விளங்காத கூட்டமே இந்த ஒரு கேவலமான செயலே நீங்கள் பாரதத்தின் ஒரு சமூகத்திற்கு எதிரானவனுங்க என்று நிரூபிக்கிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 09:29

சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சி என்று மக்கள் முட்டாத்தனமாக நம்பிய நம்பிக்கையை வைத்து விளையாண்டு தள்ளியிருக்கு காங்கிரஸ்.. சற்று முன் பின் பல நாடுகள் இந்தியாவுடன் சேர்த்து சுதந்திரம் பெற்றன... அங்கேயெல்லாம் எந்த காந்தி, நேரு சென்று சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்கள் ??


M Ramachandran
ஜன 27, 2025 09:26

உள்ளதை சொன்னால் ...


Kalyanaraman
ஜன 27, 2025 08:39

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?? காங்கிரசும் ஆம் ஆத்மியும் இந்த கலவரத்தின் பின்னணியில் இருந்திருக்கிறதோ?


Narayanan Muthu
ஜன 27, 2025 09:29

கலவரம் என்றாலே அது பாஜக தான் என்பது ஊரறிந்த ஒன்று. பிஜேபி அனுதாபியாக இருப்பின் இந்த சந்தேகம் வந்திருக்கவே கூடாது.


Laddoo
ஜன 27, 2025 09:52

எல்லா திருட்டு பசங்களும் ஓன்று சேர்ந்த கூடாரம் தான் இத்தாலிய மாபியா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை