உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொதுப்பிரிவு ஏழைகளை பற்றி சிந்திக்காத காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு

பொதுப்பிரிவு ஏழைகளை பற்றி சிந்திக்காத காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: ''பொதுப் பிரிவிலும் ஏழைகள் இருக்கிறார்கள் என்பதை 60 ஆண்டுகளாக காங்கிரஸ் சிந்தித்துக்கூட பார்க்கவில்லை. அவர்களுக்கும் இடஒதுக்கீடு தேவை என்பதை அறிந்து, நாங்கள் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினோம்'' என பிரதமர் மோடி பேசியுள்ளார்.ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைய உங்கள் (மக்கள்) அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற வந்துள்ளேன். வலிமையான இந்தியா, வளர்ந்த இந்தியா, வளர்ந்த ஹிமாச்சல பிரதேசத்தை உருவாக்க உங்கள் ஆசிகள் வேண்டும். ஐந்து கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டது; இப்போதே பா.ஜ., - தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வருவது உறுதியாகிவிட்டது. ஹிமாச்சலின் உயரமான மலைகள் என் மனதை உயர்வாக வைத்திருக்க கற்றுக் கொடுத்தன, பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்க கற்றுக் கொடுத்தன. பாரத அன்னையை இழிவுபடுத்துவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், பாரத அன்னையை அவமதிப்பதை காங்கிரஸ் நிறுத்தவில்லை. 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்வதிலும், 'வந்தே மாதரம்' என்று சொல்வதிலும் காங்கிரசுக்கு கஷ்டமாக இருக்கிறது. அப்படிப்பட்ட காங்கிரசால் ஹிமாச்சல பிரதேசத்திற்கு எந்த நன்மையும் செய்ய முடியாது.காங்கிரஸ் காலத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். பலவீனமான அரசாங்கமாக அது இருந்தது. அதனை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது. பலவீனமான காங்கிரஸ் அரசு உலகம் முழுவதும் உதவி கேட்டு அலைந்தது. ஆனால், இந்தியா இனி உலகத்திடம் பிச்சை எடுக்காது; இந்தியா சொந்தமாகப் போரிடும்.

பொதுப்பிரிவு ஏழைகள்

பொதுப் பிரிவிலும் ஏழைகள் இருக்கிறார்கள் என்பதை 60 ஆண்டுகளாக காங்கிரஸ் சிந்தித்துக்கூட பார்க்கவில்லை. அவர்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை. நான் பொதுப்பிரிவில் உள்ள ஏழை மக்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினேன். இதன்மூலம் பல்வேறு துறைகளில் அவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.

இண்டியா கூட்டணியின் சதி

ஒரு பக்கம் மோடியின் கியாரன்டியும், மற்றொரு பக்கம் காங்கிரசின் அழிவு மாடலும் இருக்கிறது. ஆட்சியைப் பிடிக்க, ஹிமாச்சல் மக்களிடம் காங்கிரஸ் நிறைய பொய்களைச் சொன்னது. இண்டியா கூட்டணியின் சதிக்கு சமீபத்திய உதாரணம், மேற்கு வங்கத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, கோல்கட்டா உயர் நீதிமன்றம் பல முஸ்லிம் சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இண்டியா கூட்டணியால் பல முஸ்லிம் சாதிகள், ஓபிசி ஆக்கப்பட்டு அவர்களுக்கு ஓபிசி உரிமைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம், இண்டியா கூட்டணி, ஓபிசி.,களின் உரிமைகளை பறித்தது மற்றும் அரசியலமைப்பை மீறியது தெளிவாகியுள்ளது. கோல்கட்டா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, இண்டியா கூட்டணி கட்சிகள் பீதியில் உள்ளனர். மேற்குவங்க முதல்வர், நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுக்கிறார். அவர்களுக்கு அரசியல் சாசனமும் நீதிமன்றமும் முக்கியமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

INDIAN Kumar
மே 24, 2024 17:51

ஜாதிகள் ஒழிக்கப்பட்டு ஏழைகள் வாழ்வு முன்னேற வேண்டும் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள் வாழ்வு மேம்படவேண்டும் ஜாதிகள் இல்லை அடி பாப்பா என்கிற பாரதியின் கனவு நனவாக வேண்டும்.


MADHAVAN
மே 24, 2024 17:48

மோடிக்கு தெரிந்தது முஸ்லீம் பாகிஸ்தான், ஹிந்து, தீவிரவாதி, காஷ்மீர் இதுமட்டும்தான், மோடிக்கு தெரியாதது இந்திய மக்கள், இந்தியா, அமைதி, மதநல்லிணக்கம், சகோதரத்துவம்,


GMM
மே 24, 2024 17:36

அனைத்து பிரிவு ஏழை பற்றி காங்கிரஸ், திராவிட கூட்டம் சிந்திக்கவில்லை. பணம் படைத்தவன் தான் பலன் அடைந்தான். தேர்தலில் வெற்றி பெற மாறுபட்ட கொள்கை கட்சிகளுடன் கூட்டணி, பண இருப்பு தெரியாமல், ஏராள இலவச திட்டங்கள். வாக்கு வங்கி உருவாக்கி, ஏராள இட ஒதுக்கீடு. சாதி ஒழிப்பு என்று கூறி, சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு. தற்போது மத இட ஒதுக்கீடு. அரசியல் சாசன நீதிமன்றம் இதனை கூட புரிந்து தடுக்க முடியாமல் அமைதி பணி. இட ஒதுக்கீடு அளவுகோல் ஏழ்மை. சாதி, மதம், இனம், மொழி அல்ல. முன்னாள் ராணுவத்தினர் போன்று நாட்டிற்கு சேவை புரிந்தவர்களுக்கு மட்டும். வாக்கு வங்கி குறைந்த சாதியை பொது பிரிவில் சேர்த்து, அதிலும் அனைவர்க்கும் இடம் உண்டு என்று கூறி, முற்பட்ட சாதி மக்களை அறுபது ஆண்டுகளாக வாழ விடவில்லை.


முருகன்
மே 24, 2024 16:46

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி ஓட்டு அறுவடை செய்வதில் வல்லவர்


Lion Drsekar
மே 24, 2024 16:25

மக்களுக்கு நன்மைகள் இந்த அரசியல் கட்சிகள் செய்வதற்காக ஒன்றிணைந்து செயல்பட்டால் உலகமே பாராட்டும் ஆனால் இங்கு மக்களை எப்படி பிரிப்பது, ஒற்றுமையை சீர்குலைப்பது எப்படி என்பதுதானே இன்றைய மாடலாகிவிட்டது . இது ஏதோ ரூ கட்சிக்கு அல்ல, எல்லா கட்சிகளும் இப்படித்தான் உள்ளன . அவர்களுக்கு துதிபாட துணை இயக்கங்கள் தற்போது மீடியா வேறு இவர்களுக்கு ஒத்துஊதுவதற்கு மொத்தத்தில் இவர்கள் கூறுவதுதான் செய்தி, காட்டுவதுதான் உண்மை என்றாகிவிட்டது . உலகம் ஏழ்மையில் உள்ளவர்களை ஏழையாக பார்க்கும் அவர்களுக்கு உதவுவதற்கு சேவையை இயக்கங்களை ஆரம்பித்து செய்து வருகிறது . அவைகள் ஜாதி, மத, இன , மொழி பார்க்காமல் உலகம் முழுவதும் செயல்படுகிறது . ஆனால் அரசியலில் இந்த முறை முற்றிலுமாய் மறந்துவிட்டது . மேலும் உலகம் எப்படி எடுத்துக்கொள்ளும் என்பதை வெளிப்படையாக கூறுவதற்கும் தயக்கமாகா இருக்கிறது இருந்தாலும் சொல்லவேண்டிய ஒரு நிலைக்கு வந்துவிட்டோம் . தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு லஞ்சம், பிரியாணி, கூட்டத்துக்கு பணம் என்ற கலாச்சாரம் வந்தது போல் , திரும்பும் இடமெல்லாம் இலவசம் என்ற பேச்சு , செயல்முறையில் இருக்க அதை நிறுத்தினால் மாபெரும் புரட்சி ஏற்படுத்தும் அளவுக்கு அரசியலும் இயக்கங்களும் களம் இறங்குவார்கள் காரணம், பதவி, பணத்துக்காக இந்த இறிவைத்தான் இவர்கள் மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்திவரும் நிலையில் மக்களின் நலன், மற்றும் ஒற்றுமைக்கு வழி வகுத்துவிட்டால் எல்லாமே நல்லவர்களின் கைகளுக்கு சென்றுவிடும் . இந்த எதிர்நீச்சலில் கர்ம வீரரை விரட்டி அடித்த பெருமை நமக்குத்தான் , எப்போதும் போல் அவர் நம்மை விட்டுச்சென்றவுடன் அவரை நல்லவர் என்று எப்போதாவது உச்சரிப்பது போல்தான் எல்லாமே . எங்குமே நடந்து கொண்டு இருக்கிறது, நடக்கவும் போகிறது . மக்களை எந்த வேறுபாடும் இல்லாமல் அவர்களின் ஏழ்மையை யார் ஒழிக்க முன்வருகிறார்களோ அவர்களை இவ்வுலகம் உள்ளவரை போற்றும், வந்தே மாதரம்


Google
மே 24, 2024 15:25

வெறும் வாய். 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்..


மேலும் செய்திகள்







புதிய வீடியோ