மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago
பெங்களூரு : ''தேர்தல் அறிக்கையில் பயனுள்ள அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வகுப்போம்,'' என, லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.லோக்சபா தேர்தலுக்கு, காங்கிரஸ் தரப்பில் தேர்தல் அறிக்கைகள் தயாரிப்பதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இக்குழு உறுப்பினர்கள் மாநில வாரியாக சென்று, உள்ளூர் கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர். இந்த வகையில், அந்த குழு உறுப்பினர் ராஜு தலைமையில், பெங்களூரு ராஜ்பவன் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:அரசியல் சாசனம், ஜனநாயகம், கூட்டாட்சி அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தேர்தல் அறிக்கையில் பயனுள்ள அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வகுப்போம்.நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு திட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, உணவு பாதுகாப்பு சட்டம், கட்டாய கல்வி உரிமை, தகவல் அறியும் உரிமை சட்டங்கள் இயற்றப்பட்டன.நாட்டின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வாக்குறுதிகளை வழங்க வேண்டும். 2013ல் வழங்கிய வாக்குறுதிகளில் 98 சதவீதமும்; 2024ல் ஐந்துக்கு, ஐந்து வாக்குறுதிகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுஉள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் எம்.பி., ராஜிவ்கவுடா, மாநில தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு முக்கியஸ்தர் மெஹரூஜ் கான் உட்பட பலர் பங்கேற்றனர்.
3 hour(s) ago | 9
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago