உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் தலைவர் கார்கே மருத்துவமனையில் அட்மிட்

காங்கிரஸ் தலைவர் கார்கே மருத்துவமனையில் அட்மிட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: காங்கிரஸ் தேசிய தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 83. இவருக்கு நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் அடித்ததால், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்த அறிவுறுத்தினர். இதையடுத்து, அவருக்கு பேஸ் மேக்கர் பொருத்தப்பட உள்ளது. இது குறித்து, கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே நேற்று வெளியிட்ட அறிக்கை: கார்கேவுக்கு பேஸ் மேக்கர் பொருத்த டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கான அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமுடன் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்., தலைவர் கார்கேவை, கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !