உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமராக பிரியங்கா இருந்தால்... காங்., எம்.பி., சொல்வது இது தான்

பிரதமராக பிரியங்கா இருந்தால்... காங்., எம்.பி., சொல்வது இது தான்

புதுடில்லி: பிரியங்கா பிரதமராக இருந்திருந்தால், வங்கதேசத்தில் இன்று ஹிந்துக்களின் நிலை இப்படி இருந்திருக்காது என்று காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறியுள்ளார். வங்கதேசத்தில் தீபுசந்திரதாஸ் என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டதை கண்டித்து, அந்நாட்டில் பெரும் வன்முறை மூண்டுள்ளது. நாடு தழுவிய போராட்டங்களினால் வங்கதேசம் அமைதியிழந்து காணப்படுகிறது. வங்கதேச நிலவரம் குறித்து இந்திய அரசியல் தலைவர்களும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். காசா பிரச்னைகளை மட்டுமே பேசுகிறார், வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களின் துயரத்தை பற்றி பேசாமல் ராகுல் புறக்கணித்து வருகிறார் என்று பாஜ குற்றம்சாட்டியது.இந் நிலையில், பாஜ விமர்சனத்திற்கு சஹரன்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் பதிலளித்து உள்ளார். அவர் கூறியதாவது; பாஜவுக்கு வேறு வேலை இல்லை. ராகுல் எனக்கும் பிரியங்காவுக்கும் தலைவர்தான். பிரியங்கா பற்றி ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது, நான் அவரை மையமாகக் கொண்டு, அவர் அடுத்த இந்திரா என பதிலளித்தேன்.ராகுலும், பிரியங்காவும் இந்திராவின் இரு கண்கள். அவர்களை வித்தியாசமாக பார்க்கக்கூடாது. பிரியங்கா பிரதமராக இருந்திருந்தால், வங்கதேசத்தில் இன்று ஹிந்துக்களின் நிலை இப்படி இருந்திருக்காது என்று மட்டுமே நான் கூறியிருந்தேன்.பிரியங்கா தலைமையில் அண்டை நாடுகள் உடனான உறவு சுமுகமாக இருந்திருக்கும். ராகுல் நாங்கள் மிகவும் மதிக்கப்படும் தலைவர். அவரின் (பிரியங்கா) அரசியல் பிரவேசம் வரவுள்ள தேர்தல்களில் காங்கிரசுக்கு மிக பெரும் ஊக்கத்தை அளிக்கும்.வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசு ராஜதந்திர ரீதியாக தோல்வி அடைந்துள்ளது. அதில் இருந்து கவனத்தை திசைதிருப்பவே எதிர்க்கட்சிகள் மீது பழிசுமத்துகிறது.வங்கதேசத்தில் உள்ள ஹிந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு இம்ரான் மசூத் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

yts
டிச 24, 2025 09:27

காங்கிரஸ் காரர்கள,,......... என்று அடுக்கு ஒரு தடவை நிரூபித்துக் கொண்டுள்ளார்கள்


Ramesh Sargam
டிச 23, 2025 20:57

பிரியங்கா பிரதமராக இருந்திருந்தால், வங்கதேசத்தில் இன்று ஹிந்துக்களின் நிலை இப்படி இருந்திருக்காது. ஆம், இதைவிட மிக மிக மோசமாக இருந்திருக்கும்.


Santhakumar Srinivasalu
டிச 23, 2025 19:41

பிரியங்கா வந்து என்ன நடக்கப்போகுது..


Gopal
டிச 23, 2025 18:53

காங்கிரஸ் கனவுகளில் இதுவும் ஒன்று. ஒரு புரிதல் இல்லாத பேச்சு இந்த காங்கிரஸ் காரனின் பேச்சு. வாயில் வடை சுடும் நபர்கள் காங்கிரஸ் .


சாமானியன்
டிச 23, 2025 18:29

பட்டினி பரவலாக இருக்கும் பங்களாதேஸில் மதம் என்ன பாவம் பண்ணியது. அடித்துக்கொண்டு சாகிறார்களே !


ராமகிருஷ்ணன்
டிச 23, 2025 17:31

நம்முடைய நாட்டிலே யார் பிரதமராக இருக்க வேண்டும் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். வெளி நாட்டுகார்களின் விருப்பு வெறுப்பு தேவையில்லை. தீவிரவாதிகளின் கட்சி காங்கிரஸில் இருந்து யாரும் பிரதமராக வர வாய்ப்பு இல்லை.


duruvasar
டிச 23, 2025 17:14

நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் இருப்பதுபோல் வங்கதேச ஹிந்துக்களை காப்பாற்றும் ரகசியம் இருக்கிறதோ என் வோ ?


Guru Rajan
டிச 23, 2025 19:20

ப்ரியங்காவின் paaatti இந்திராகாந்தி செய்த தவறினால் இந்தியர்கள் இன்று ம்பங்களாதேஷ் இஸ்லாமிர்களால் கொடுமை படுத்த படுகிறார்கள் அன்று முக்திவாஹினி என்றபெயரால் இந்திய ராணுவத்தைப பங்களாதேஷ் உள்ளே அனுபபி பாகிஸ்தானுக்கு எதிராக போர்செய்து பங்களாதேஷை பிரித்தால் நம் இன்று அவதிப்படுகிறோம்


சமீபத்திய செய்தி