உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வணிகர்களின் வேதனைக்குரல் உலுக்கியது: சொல்கிறார் ராகுல்

வணிகர்களின் வேதனைக்குரல் உலுக்கியது: சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பெரிய நிறுவனங்களுக்கு தாராளம் காட்டி விட்டு, சிறு, குறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களை முறையற்ற ஜிஎஸ்டி போன்றவற்றால் மத்திய அரசு கட்டிப்போட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: வைசிய சமூகத்தினருடனான வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, எங்களின் தொழில் சரிவின் விளிம்பில் இருப்பதாக அவர்களின் வேதனைக் குரல் உண்மையில் என்னை உலுக்கி விட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிற்கு பெரும் பங்களித்த இந்த சமூகம், தற்போது விரக்தியின் உச்சத்தில் இருக்கிறது. இது ஒரு அபாயத்திற்கான எச்சரிக்கை மணி.பெரிய பெரிய நிறுவனங்களுக்கு தாராளம் காட்டி விட்டு, சிறு,குறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களை முறையற்ற ஜிஎஸ்டி போன்றவற்றால் இந்த அரசு கட்டிப்போட்டுள்ளது. இது வெறும் கொள்கை தோல்வி அல்ல. உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தின் மீதான நேரடி தாக்குதல். இது மன்னராட்சி எண்ணம் கொண்ட பாஜ அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், நாட்டு வர்த்தகத்தின் முதுகெலும்பாக இருக்கும் வைசிய சமூக மக்களுக்கு துணை நிற்பேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

K.P SARATHI
டிச 24, 2025 18:05

GST வந்த பிறகு MSME போன்றவர்கள், நிலைத்து தொழில் செய்ய முடிய வில்லை. காரனம் கால அவகாசம் குறைவு மற்றும் ஒரு சிறிய தவறுக்கு அபராத தொகை அதிகம். வேலை இழப்பு அதிகம்


Rathna
டிச 24, 2025 17:09

GST வருவதற்கு முன்னால் இருந்த பல வரிகளை கூட்டினால், பல மாநிலங்களில் 20-40% வரை வரி இருந்தது. இது தவிர வணிக வரி துறையின் ஊழல் பல லக்ஷம் கோடி ரூபாய். தொழில் நடத்த வணிக வரி செர்டிபிகேட் வாங்க, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் ஊழல், போக்குவரத்து லாரிகளை மறித்து பிடித்து வைத்து கொண்டு நடக்கும் வணிக வரி போன்ற துறைகளின் பல நூறு கோடி ரூபாய் ஊழல், வருட வருடம் கணக்கு முடிக்க லஞ்சம் என சேர்த்து சில லக்ஷம் கோடி ரூபாய் ஊழல் எல்லாம் நடந்தது. இந்த ஊழலை எல்லாம் இவர்கள் ஆதரித்தது தான். நியாயமான அரசாங்கத்திற்கு செலுத்தும் வரியை ஏமாற்றி பிழைத்த பல பெரிய வியாபாரிகள் கூச்சல் போடுவது நியாயமா? அதற்கு இவர் தனது பாணியில் பேசுவது பொது மக்களை ஏமாற்றுவது தான்.


RATNAM SRINIVASAN
டிச 24, 2025 17:07

for everything he will bring e factor


vee srikanth
டிச 24, 2025 15:41

முதலை கண்ணீர்


S.V.Srinivasan
டிச 24, 2025 14:52

எந்த மாநிலத்திலும் தேர்தல்ல ஜெயிக்க மமுடியலையே. எதுக்கு இப்போ சமூகத்துக்கு துணை இருப்பேன் அது இதுன்னு . எந்த வணிகர்கள் உங்களிடம் வந்து வேதனை குரல் எழுப்பினார்கள்? லிஸ்ட் கொடுக்க முடியுமா?


ram
டிச 24, 2025 14:40

அறுபது ஆண்டுகள் இந்த காங்கிரஸ் ஆட்சி செய்து இந்தியாவை குட்டிச்சுவர் ஆகிவிட்டான்கள். பங்களாதேஷ் முஸ்லிம் வெறியர்கள் ஹிந்துக்களை கொள்ளுகிறான்கள் அதை பத்தி இந்த INDI கூட்டணி ஆட்கள் எதுவும் பேசாமல். இவன் AAKA பாலஸ்தீன் BAG மாட்டிக்கொண்டு பாராளுமன்றத்துக்கு போனார், இப்போது இதை பத்தி பேச்சு மூச்சு காணோம். இவர் எதாவது வெளிநாடு போனால், ஹிந்துக்களுக்கு எதாவது ஆபத்து வருகிறது.


vadivelu
டிச 24, 2025 14:34

இஸ்லாமியர்கள், மதமாற்றத்தை இரும்பும் கிருத்துவர்கள், காங்கிரஸ் தங்களுக்கு பாதுகாப்பானது என்று கருதி ஆதரவு கொடுத்து கொடுத்து வருகின்றனர். இதில் கிருத்துவர்கள் விழித்து கொள்ளவார்கள், ஆதரவை பங்கு போட்டு விடுவார்கள்.


Venkateswaran V
டிச 24, 2025 14:17

முதலில் ராகுல் நாட்டிற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தேச பற்றுடன் இருக்கட்டும் . வெளி நாட்டில் தேசத்தை அவதூறாக பேசுவது தேச துரோகம் என்று நினைவில் கொள்ளட்டும்


GMM
டிச 24, 2025 14:13

சேவைக்கு 20 லட்சம், பொருளுக்கு 40 லட்சம் வருட விற்பனை வரும் வரை GST பதிவு தேவை இல்லை. காரணம் துவக்க சேவை மற்றும் வியாபாரம். மாநிலம் தன் பங்கு GST பெறும். அதிக கடை வாடகை, வணிக அருகருகே அனுமதியில் ஒழுங்கின்மை. வணிகர்களை மிரட்டி வசூல் செய்யும் ரவுடிகள், முதலீடு இல்லாத நடைபாதை கடைகள் போன்ற பல காரணிகள். மாநில gst பங்கு பகுதி உள்ளாட்சி அமைப்புகள் பெற வேண்டும். அதற்கு ராகுல் குரல் கொடுக்க வேண்டும்.


Santhakumar Srinivasalu
டிச 24, 2025 13:31

பரிந்து பேசி அனுதாபம் சேர்க்க பார்க்கிறான்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை