உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலுக்கு 8,000 பிரமுகர்கள் நியமிக்க காங்கிரஸ் திட்டம்

தேர்தலுக்கு 8,000 பிரமுகர்கள் நியமிக்க காங்கிரஸ் திட்டம்

பெங்களூரு,: தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், 8,000 பேரை லோக்சபா தேர்தல் பணிகளுக்கு நியமிக்க, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.காங்கிரஸ் தேசிய முதன்மை செயலர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தலைமையில், நேற்று முன் தினம் இரவு, பெங்களூரில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் கூட்டத்தில் பங்கேற்றனர்.வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்த, முன்னாள் அமைச்சர் ரேவண்ணா தலைமையில், உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு துணை தலைவர்கள், உறுப்பினர்களை நியமிக்க வேண்டியுள்ளது.மாவட்ட, தாலுகா தலைவர்கள், துணை தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் உட்பட, பல்வேறு பதவிகளுக்கு நியமிக்க வேண்டும். இந்த தொண்டர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த நியமனங்களை முடித்தால், 4,000 தொண்டர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.ஏற்கனவே எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்களுக்கு கார்ப்பரேஷன், வாரியங்களில் தலைவர், துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது லோக்சபா தேர்தல் நெருங்குவதால்,4,000 பிரமுகர்களை, கார்ப்பரேஷன், வாரியங்களின் உறுப்பினர்கள், இயக்குனர்கள் பணியிடங்களில் நியமிக்க ஆலோசனை நடந்தது.பதவியுடன், தேர்தல் பொறுப்பு கொடுத்தால், அவர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவர். இது அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற, உதவியாக இருக்கும் என்பது, காங்கிரஸ் தலைவர்களின் எண்ணமாகும். பிரமுகர்களுக்கு பொறுப்பு கொடுக்க விரும்புவதை, துணை முதல்வர் சிவகுமாரும் உறுதிபடுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ