உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களுக்கு மாதம் ரூ.2,500 காங்., வாக்குறுதி

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 காங்., வாக்குறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், டில்லியில் வசிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்கும், 'பியாரி தீதி யோஜனா' என்ற திட்டத்தை காங்கிரஸ் அறிவித்து உள்ளது. இது குறித்து, அக்கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான சிவகுமார் நேற்று டில்லியில் கூறியதாவது:டில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இங்கு வசிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும். டில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பேசும் தமிழன்
ஜன 07, 2025 20:08

காசெல்லாம் வேண்டாம்.... சும்மாவே வேலை செய்கிறோம்.... கான் கிராஸ்.... சீ.... போ உன் சகவாசமே வேண்டாம்.... இது தான் நாட்டு மக்கள் அனைவரின் மனநிலை !!!


GS kumar
ஜன 07, 2025 10:01

இதென்ன அநியாயமா இருக்கு . பணம் எங்கிருந்து வரும் , வரி கட்டுறவன் தல மேல மிளகா அரைப்பதா ???? அடிப்படை வசதிகள் செய்யாமல் மக்களை இப்படி பிச்சைக்காரனை போல் ஆக்குவது தான் ஜனநாயகமா .... எல்லோருக்கு தரமான இலவசக் கல்வி , தரமான மருத்துவம் , வேலை வாய்ப்பு கொடுங்கள் . ஓட்டுக்காக மக்களை அடிமை ஆக்குவது மிக கொடுமை உச்ச நீதி மன்றம் தானாக இந்த பணம் கொடுப்பதை விசாரித்து தடை செய்ய வேண்டும் அணைத்து மாநிலத்திலும் ................


Kasimani Baskaran
ஜன 07, 2025 09:34

ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக டோல் பணம் கொடுத்து விடலாம். ஆஸ்திரேலியா அளவுக்கு வசதிகள் செய்து கொடுத்து விடலாம்.


vbs manian
ஜன 07, 2025 09:28

எல்லோரும் சேர்ந்து நாட்டை திவாலாக்குங்கள்.


பேசும் தமிழன்
ஜன 07, 2025 07:52

ஒன்றும் தேவையில்லை... நீங்கள் ஆட்சி செய்து கொண்டு இருக்கும் மாநிலங்களில் முதலில் இதை அமல்படுத்தினால் நன்றாக இருக்கும். மக்களுக்கும் நம்பிக்கை வரும்.


Rajamannar
ஜன 07, 2025 07:03

This type of election promises by political parties tantamount to inducing bribery. If it is so what is the meaning for conducting free and fair election prescribed in the constitution for Election Commission? Perhaps free has a different meaning for political parties in India. The Supreme Court of India is a mute spectator


அப்பாவி
ஜன 07, 2025 06:08

பிச்சை போடறோம். எங்களுக்கு ஓட்டுப்.பிச்சை போடுங்க தாயே.


சம்பா
ஜன 07, 2025 04:48

விடியலின் பாதையில் நாசகரமான திட்டம்


தாமரை மலர்கிறது
ஜன 07, 2025 02:26

வெரி குட். பிஜேபி எதிர்ப்பு ஓட்டுகள் ரெண்டாக பிரிந்து, மிக எளிதாக பிஜேபி டெல்லியில் வெற்றிபெறும்.


xxxx
ஜன 07, 2025 01:21

குடுங்க குடுங்க இங்க அரசாங்கம் முடிஞ்சிட்டு . எல்லா இடத்தையும் முடிச்சிவிடுங்க


முக்கிய வீடியோ