உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு

பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு

புதுடில்லி: காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்திகளை பரப்பும் தொழிற்சாலையாக மாறிவிட்டது என்று பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதாப் பந்தாரி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. மோடியின் ரத்த நாளங்களில் ஓடுவது ரத்தம் அல்ல. கொதிக்கும் சிந்தூர் (குங்குமம்) தான் பாய்கிறது. மோடி இங்கே இருப்பதை பாகிஸ்தான் மறந்துவிட்டது. நான் நெஞ்சை நிமிர்த்தி, தலையை நிமித்து நின்று கொண்டிருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்,' எனப் பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=titz215x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது இந்தப் பேச்சை விமர்சித்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், இந்தியாவின் கவுரவத்தில் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், டிரம்ப்புக்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்? என்றும், கேமராக்களுக்கு முன்பு மட்டும் உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்? என்றும் கேட்டிருந்தார். ராகுலின் இந்தப் பேச்சு பா.ஜ.,வினரை கொதிப்படையச் செய்துள்ளது. ராகுலின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விடுத்த எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; இறுதியாக பிரதமர் மோடியின் உரையை நீங்கள் பார்த்திருப்பது தற்போது தெரிகிறது. இதற்காக நீங்கள் 10 நாட்கள் எடுத்துக் கொண்டாலும், இது நல்ல விஷயம் தான். உங்கள் கட்சி கடந்த காலங்களில் செய்து கொண்டிருந்ததைப் போல, மோடி அரசு காதல் கடிதத்தை ஒன்று அனுப்பவில்லை. வலிமையான பதிலடியை கொடுத்துள்ளோம், எனக் கூறினார். அதேபோல, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதாப் பந்தாரி வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், காங்கிரஸ் இன்று பாகிஸ்தானுக்கு ஆதரவான போலி செய்திகளை பரப்பும் தொழிற்சாலையாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Balasubramanian
மே 23, 2025 19:57

பாகிஸ்தானுக்கு எதிராக நமது நாட்டின் எம்பிக்கள் வெளி நாட்டில், இவர் நமது நாட்டில் ஆதரவாக, இதில் இருந்து என்ன தெரிகிறது?


P. SRINIVASAN
மே 23, 2025 17:57

பொய் பிரச்சாரம் செய்வது பிஜேபியின் ஒரு கொள்கை. நீங்கள் காங்கிரசை குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை.


Rajarajan
மே 23, 2025 15:36

அதை விடுங்க. இந்தியா ஏன் நாலு துண்டா புரிஞ்சது ? ஏன் பிரிச்சாங்க ? யார் பிரிச்சாங்க ? காஷ்மீர் தீராத பிரச்சினைக்கு, யார் அடிப்படை காரணம் ? இதுக்கு பதில் சொல்லுங்க போதும்.


என்றும் இந்தியன்
மே 23, 2025 17:07

இப்போ பாகிஸ்தான் இரண்டு துண்டுகளாக பிரியுது மூன்றாவது துண்டுக்கு இப்போ போராட்டம் நடக்குது


தமிழ் மைந்தன்
மே 23, 2025 14:48

நன்றி மறவாமல் இருப்பது மனிதனுக்கு மிக முக்கியம்


V Venkatachalam
மே 23, 2025 14:28

பாரத பூமி உலகிலேயே மிக மென்மையான பூமி. இவனும் இவன் அம்மாவும் ஜாமீனில் சுத்திக் கொண்டிருப்பதுவே சாட்சி. இந்தியாவில் எல்லாவற்றையும் ஃப்ரீயா அனுபவித்து கொண்டு பேச்சு மாத்திரம் பாக்கிஸ்தானை ஆதரித்துப். பேசுறது.இவன சுளுக்கு எடுத்தாலே போதும்.


sundarsvpr
மே 23, 2025 13:37

குடும்பங்களில் பல குழந்தைகள் இருக்கும். அதில் ஒரு குழந்தை அடாவடித்தனம் செய்யும். அசிங்கம் செய்யும். தத்தாரியாய் திரியும். அந்த தத்தாரிக்கு ஆதரவு நண்பர்கள் இருப்பார்கள். இது அரசியலுக்கு பொருந்தும் . அந்த கூட்டத்தை நகைப்பதை ஒதுக்குவதை தவிர மக்கள் வேறு என்ன முடியும்.? இதுதான் விதி.


முருகன்
மே 23, 2025 13:29

ராகுல் கேள்வி கேட்டால் பாகிஸ்தான் ஆதரவு என மாற்றுவது ஏன் கேட்ட கேள்விக்கு பதில் என்ன ராகுல் பேச்சில் எங்கே குறை உள்ளது


Kumar Kumzi
மே 23, 2025 14:16

இந்தியாவை பற்றி வெளிநாடுகளில் கேவலமாக கதைக்கும் பொது கோமாவில் இருந்தியா


Arjun
மே 23, 2025 15:17

பாகிஸ்தானின் எதிர்கட்சி தலைவர் மாதிரியே நடந்து கொள்கிறார் பப்பு


Barakat Ali
மே 23, 2025 13:25

பாகிஸ்தான் சொல்ல விரும்புவது, ஆனால் சொல்ல முடியாதது .... அதைத் துணிவுடன் சொல்கிறார் ராகுல் .... அதாவது பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கிறார் ..... அவர் எதிர்க்கட்சித் தலைவராக ஆனதற்குக் காரணம் காங்கிரசுக்கு வாக்களித்தவர்கள் ...... அவர்கள் தலைகுனிய வேண்டும் ....


RAJ
மே 23, 2025 13:10

No surprise.. hahahaha


Rathna
மே 23, 2025 12:51

தன் தலையிலேயே தானே மண்ணை போட்டுக்கொள்ளும் செயல்தான் இது. 2029 லும் மீள முடியாது போலிருக்கே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை