உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 எம்.எல்.சி., பதவிகளைப் பெற காங்கிரஸ் இலக்கு!

6 எம்.எல்.சி., பதவிகளைப் பெற காங்கிரஸ் இலக்கு!

பெங்களூரு: 3ம் தேதி நடக்கும் எம்.எல்.சி., தேர்தலில் ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. இதற்காக மூன்று அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளனர்.கர்நாடக மேலவையின் வட கிழக்கு பட்டதாரி, பெங்களூரு பட்டதாரி, கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர், கர்நாடக தென்மேற்கு ஆசிரியர் ஆகிய தொகுதி உறுப்பினர்களின் பதவிக் காலம், அடுத்த மாதம் 21ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.தவிர, கர்நாடக தென்மேற்கு பட்டதாரி தொகுதி பா.ஜ., - எம்.எல்.சி.,யாக இருந்த ஆயனுார் மஞ்சுநாத், 2023 ஏப்ரல் 19ம் தேதியும்; கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.சி.,யாக இருந்த மரிதிப்பே கவுடா, கடந்த மார்ச் 21ம் தேதியும் தன் பதவியை ராஜினாமா செய்தனர்.மேற்கண்ட ஆறு எம்.எல்.சி., பதவிகளுக்கு ஜூன் 3ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ளது. ஏற்கனவே ஐந்து தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஒரு தொகுதிக்கு இன்னும் ம.ஜ.த., வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.அதுபோன்று காங்கிரஸ், ஆறு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில், பா.ஜ., - ம.ஜ.த.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.சி.,க்கள் ஆயனுார் மஞ்சுநாத், மரிதிப்பே கவுடாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திட்டமிடுவது தொடர்பாக, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட பல்வேறு தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.அப்போது, மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், பள்ளி கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா, உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் ஆகியோருக்கு மேலவைத் தேர்தல் பொறுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அத்துடன் கூட்டத்தில், 'ஒற்றுமையாக இருந்து சட்டசபை, லோக்சபா தேர்தல்களை சந்தித்தது போன்று, எம்.எல்.சி., தேர்தலிலும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.பொறுப்பு அமைச்சர்களுடன் அந்தந்தத் தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து செயல்பட வேண்டும். மேலவையில் பெரும்பான்மை பெற கட்சியினர் பாடுபட வேண்டும். இவர்களுடன் தொகுதி தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.எம்.எல்.சி., தேர்தலுக்கான குறுகிய காலகட்டத்தை சரியான முறையில் பயன்படுத்தி, வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்' என முடிவு செய்யப்பட்டுள்ளது.முந்தைய லோக்சபா தேர்தல் போல் அல்லாமல், 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள், தங்களுக்கு சாதகமாக இருக்கும் என காங்கிரசார் தெம்பாக இருக்கின்றனர். அதனால் அதே உற்சாகத்துடந் எம்.எல்.சி., தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ