உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 பேருக்கு மேல் கூடினால் அனுமதி அவசியம்; காங்., அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை

10 பேருக்கு மேல் கூடினால் அனுமதி அவசியம்; காங்., அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை

பெங்களூரு: 'பொது இடங்களில், 10 பேருக்கு மேல் கூடினால் போலீஸ் அனுமதி பெற வேண்டும்' என்ற, கர்நாடக காங்., அரசின் உத்தரவுக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ' கர்நாடகாவில் அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ்., உட்பட தனியார் அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்க வேண்டும்' என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். ஒத்திவைப்பு இதையடுத்து, கடந்த 18ம் தேதி மாநில உள்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில், 'எந்தவொரு தனியார் அமைப்பும், அரசு இடங்கள், சாலை, பூங்கா, விளையாட்டு மைதானம், கட்டடங்களில் ஒன்றுகூட முடிவு செய்தால், உள்ளூர் போலீஸ் அல்லது கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். இல்லையெனில் சட்ட விரோதமாக கூடியதாக வழக்குப் பதிவு செய்யப்படும்' என அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ஹூப்பள்ளியின் புனஷ்சேத்தன் சேவா அறக்கட்டளை, 'வி - கேர்' அறக்கட்டளை உட்பட நான்கு அமைப்புகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளையில் மனு தாக்கல் செய்தன. இம்மனுக்கள், நீ திபதி நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பு வக்கீல் அசோக் ஹாரனஹள்ளி வாதிடுகையில், “அரசின் உத்தரவு அரசியலமைப்பின் 13, 14, 19வது பிரிவுகளை மீறுவதாகும். எனவே, அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,” என்றார். நீதிபதி நாகபிரசன்னா பிறப்பித்த உத்தரவு: பொது இடங்களில், 10 பேருக்கு மேல் கூடுவதை தடை செய்யும் அரசின் உத்தரவு, பொது மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு சமம். அரசின் உத்தரவு அரசியலமைப்பு பிரிவு 13 (2)ஐ மீறுவதாகும். எனவே, அக்., 18ல் அரசு பிறப்பித்த உத்தரவு மற்றும் அதை தொடர்ந்து வந்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விசாரணை நவ., 17க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். பா.ஜ., வரவேற்பு இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில், 'இந்த உத்தரவு, காங்கிரஸ் அரசுக்கு எச்சரிக்கை. அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளை காங்., அரசு மதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

VENKATASUBRAMANIAN
அக் 29, 2025 08:11

காங்கிரஸ் அழிவு நோக்கி போய்கொண்டு இருக்கிறது. திமுகவை போல் செயலபட தொடங்கியுள்ளது. ஆனால் கர்நாடகாவில் நடக்காது. தமிழ் நாட்டில் மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். இதை உடனே ஒழிக்க முடியாது. மக்களை புரிந்து கொள்ள செய்ய வேண்டும்.


duruvasar
அக் 29, 2025 07:50

கர்நாடக அமுதாவுக்கும் குட்டா ?


ஆரூர் ரங்
அக் 29, 2025 07:45

வெள்ளிகிழமைகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சாலையை அடைத்துக் கொண்டு தொழுகை நடத்துகிறார்கள். ஒலிபெருக்கி பயன்படுத்துகின்றனர். இதற்கு சட்ட அங்கீகாரம், போலீஸ் அனுமதி கேட்கிறார்களா?.


GMM
அக் 29, 2025 07:06

காங்கிரஸ் ஆளும் கர்நாடகா உள்துறை செயலர் 10 பேர் கூட, உள்ளூர் போலீஸ் அல்லது கலெக்டரிடம் அனுமதி பெறவில்லை எனில் சட்ட விரோதம் என்றால் , நீதிமன்றம், சட்ட பேரவைக்கும் பொருந்தும் தானே. செயலர் உத்தரவு தான் சட்ட விரோதம்.


V GOPALAN
அக் 29, 2025 06:55

ரோடு ஓரம் உள்ள இட்லி மற்றும் பிரியாணி கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட கும்பல் கூடுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்


Kasimani Baskaran
அக் 29, 2025 05:29

பத்துப்பேருக்கு மேல் [அலுவலக உணவகத்தில் கூட அதை விட அதிகமாக கூட்டமிருக்கும்] கூடினால் கூட அரசிடம் அனுமதி என்பது மகா கேவலமான, சுத்த பயித்தியக்காரத்தனமான அடக்குமுறை. அதுவும் ஒரே தெருவுக்குள் பலலட்சம் பேருக்கு கூட அனுமதி கொடுக்கும் வல்லமை படைத்த திராவிடமடக்கோட்பாட்டுக்கு நேர் எதிரானது.


Field Marshal
அக் 29, 2025 05:10

இறந்தவர்கள் எடுத்து சென்றால் பத்து பேருக்கு மேல போவாங்க ..கலியாண ஊர்வலங்களில் அதே நிலைமை


முக்கிய வீடியோ