உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி.எஸ்.டி., - 2.0 வளர்ச்சியை முடக்காமல் எளிமையாக இருக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ஜி.எஸ்.டி., - 2.0 வளர்ச்சியை முடக்காமல் எளிமையாக இருக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஜி.எஸ்.டி., 2.0 என்பது வளர்ச்சியை முடக்கும் வரியாக இல்லாமல், நல்ல மற்றும் எளிமையான வரியாக இருக்க வேண்டும்' என, காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. டில்லியில் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 'நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்' என தெரிவித்தார். ஜி.எஸ்.டி., 2.0 வின்படி, 12 மற்றும் 28 சதவீத அடுக்குகள் நீக்கப்பட உள்ளதாகவும், 12 சதவீத அடுக்கில் உள்ள பெரும்பாலான பொருட்கள், 5 சதவீத அடுக்குக்கு மாற்றப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், 28 சதவீத அடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள், 18 சதவீத அடுக்குக்கு மாற்றப்படும் என்றும் சொல்லப் படுகிறது. இந்நிலையில் காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஏழு ஆண்டுகளாக, ஜி.எஸ்.டி., வரி விகிதங்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருந்தன. இந்த சதவீத கட்டமைப்பு வரி ஏய்ப்புக்கு வழிவகுத்தன. ஆகையால், விகிதங்களின் அடுக்குகளில் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். பழைய ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், பொருளாதார வளர்ச்சி இருக்காது என்பதை, பிரதமர் மோடி இப்போது உணர்ந்துள்ளார். விகித கட்டமைப்பை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. 'ஜி.எஸ்.டி., 2.0' ஆனது, வளர்ச்சியை முடக்கும் வரியாக இல்லாமல், நல்ல முறையிலும், எளிமையான வகையிலும் இருக்க வேண்டும். அதேசமயம், மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஆக 17, 2025 11:42

ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்ட போது அப்போதிருந்த வருவாயை அப்படியே நீடிக்க வைக்குமளவுக்கான REVENUE NEUTRAL வருவாய் கிடைக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எவ்வித வரிவிகிதக் குறைப்பும் பல மாநிலங்களை பாதிக்கும். ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவெடுப்பது சிரமம்.


D Natarajan
ஆக 17, 2025 10:28

மாத GST வருமானம் குறையாமல் சீர்திருத்தம் செய்யப்படும். ஏன் இரண்டு கட்டங்களாக வரி விதிப்பு செய்யக்கூடாது. 6% எல்லாவற்றுக்கும் 28% தற்போதுள்ளபடி . இந்த மாதிரி இருந்தால் பொதுமக்கள் பயனைடைவார்கள்


Gokul Krishnan
ஆக 17, 2025 09:10

ஜி எஸ் டியில் 12% சதவீதித்தில் உள்ள பெரும்பாலான பொருட்கள சேவைகளை 18% சதவீததிற்கு மாற்றி விட்டு ஒரு சில பொருள்களை மட்டும் 5% சதவீதமாக மாற்றி மக்களுக்கு தீபாவளி அல்வா கொடுக்கப்படும் பொறுத்து இருந்து பாருங்கள்


Kasimani Baskaran
ஆக 17, 2025 07:42

ஜிஎஸ்டி க்கு முன்னால் மாநில வரி, மத்திய வரி என்று கொள்ளை அடித்தார்கள். ஜிஎஸ்டி வந்த பின் அது பெருமளவு குறைந்தது. இப்பொழுது அது இன்னும் குறையப்போகிறது. அதாவது மாதம் சராசரியாக 1.84 லட்சம் கோடி வரும் தொகை குறையும். மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் தொகையும் குறையும். மத்திய அரசால் உள்கட்டமைப்புக்களுக்கு செலவு செய்யும் தொகை குறையும். ஊழல் செய்யும் மாநில அரசுகள் திவாலாகும்.


Saamaanyan
ஆக 17, 2025 07:11

ஜி எஸ் டி குறைத்தாலும் அதன் பலன் மக்களுக்கு முழுமையை போய் சேராது ....எந்த பொருளின் விலையும் வியாபாரிகள் குறைக்கப்போவதில்லை... கொள்ளை தொடரும்.. பெட்ரோல் டீசல் ஜி எஸ் டி க்குள் வரவே வராது... பொறுத்திருந்து பாப்போம்


Rajan A
ஆக 17, 2025 07:06

முதல்ல பப்புவை கழட்டி விட்டு விட்டு ஆலோசனை சொல்லுங்கள். அடிமைக்கு அறிவுரை சொல்ல அனுமதி இல்லை


Jack
ஆக 17, 2025 06:18

சாதாரண மக்கள் உபயோகிக்கும் AC ரெப்ரிஜெட்டார் இரு சக்கரவாகனங்களுக்கு 28% மேல் GST


புதிய வீடியோ