மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
3 hour(s) ago | 10
கலபுரகி: ''அமைச்சர் பிரியங்க் கார்கே அனைத்து விஷயங்களிலும், தேவையின்றி மூக்கை நுழைக்கிறார். அவரால் கலபுரகியில் காங்கிரஸ் தோற்க போகிறது,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ராஜு கவுடா கூறி உள்ளார்.கலபுரகியில் அவர் அளித்த பேட்டி:பிரியங்க் கார்கே எந்த துறைக்கு, அமைச்சர் என்றே தெரியவில்லை. சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு, முதல் ஆளாக முந்திக் கொண்டு பதில் சொல்கிறார். அனைத்துத் துறைகள், அரசின் விஷயங்களில் தேவையின்றி மூக்கை நுழைக்கிறார். ஹிந்துக்கள் பற்றியும், ஹிந்து மதம் பற்றியும் தேவையின்றி அதிகம் பேசுகிறார்.இதனால் லோக்சபா தேர்தலில், கலபுரகியில் காங்கிரஸ் தோற்கப் போகிறது. 'எங்கள் பிணம் கூட பா.ஜ., கட்சி அலுவலகம் வழியாக செல்லாது' என, பிரியங்க் கார்கே கூறி உள்ளார். பா.ஜ.,வுக்கு வரும்படி மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்க் கார்கேயை நாங்கள் அழைக்கவில்லை. பா.ஜ., ராம பக்தர்களின் கட்சி. ஹிந்து மதத்திற்கு எதிராக பேசுவோருக்கு, எங்கள் கட்சியில் இடம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 10