உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோவிலை காங்., இடிக்காது மோடி பொய் சொல்கிறார்: கார்கே

ராமர் கோவிலை காங்., இடிக்காது மோடி பொய் சொல்கிறார்: கார்கே

புதுடில்லி, ''காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை இடித்து விடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பது முற்றிலும் பொய். நாங்கள் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறோம்,'' என, அக்கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடித்து விடும் என பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார். நாங்கள் எப்போதாவது இப்படி தெரிவித்தோமா? ஓட்டு வங்கிஇந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க மோடி பொய் சொல்லி வருகிறார். இவரால் மட்டும் எப்படி இவ்வளவு பொய்களை தினமும் சொல்ல முடிகிறது? அனைத்து ஜாதிகளையும், மதங்களையும் நாங்கள் மதித்து வருகிறோம். பா.ஜ.,வும், பிரதமர் மோடியும் ஓட்டுக்காக மக்களை பிளவுபடுத்தி வருகின்றனர்.புல்டோசர்களை யார் பயன்படுத்துகின்றனர் என்பது மக்களுக்கு தெரியும். ஆனால், அவர்கள் வெட்கமின்றி மற்றவர்களை குற்றஞ்சாட்டுகின்றனர்.ஏழை மக்களுக்கு உதவும் வகையில், பயனுள்ள திட்டங்களை கொண்டு வரும் போதெல்லாம், அவற்றை எதிர்ப்பதையே பா.ஜ., நோக்கமாக வைத்துள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதும் பல்வேறு நலத்திட்டங்களை அக்கட்சி எதிர்த்தது.எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி இழைக்கப்படுவதை தடுப்பது ஓட்டு வங்கி அரசியல் அல்ல. நாங்கள் எதை செய்தாலும் ஓட்டுக்காக செய்கிறோம் என, பா.ஜ., கூறி வருகிறது. எங்களை பொறுத்தவரை, அக்கட்சி தான் ஓட்டு வங்கி அரசியல் செய்கிறது.ஒற்றுமை'இண்டியா' கூட்டணியை ஒன்றாக வைத்து, பா.ஜ.,வை தோற்கடிக்கும் வியூகத்தின் ஒரு பகுதியாக, லோக்சபா தேர்தலில் காங்., குறைந்த இடங்களிலேயே போட்டியிட்டது. இதில், வேறு எந்த காரணமும் இல்லை. பா.ஜ., மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை தடுப்பதே எங்கள் இலக்கு. அதில், இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் உறுதியாகவும், ஒற்றுமையாகவும் உள்ளோம்.ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பா.ஜ., நசுக்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அச்சு ஊடகங்கள் முதல் காட்சி ஊடகங்கள் வரை என, அனைவருக்கும் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டையும், நாட்டு மக்களையும் பா.ஜ.,விடம் இருந்து காங்., பாதுகாக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sathyan
மே 23, 2024 04:46

காங்கிரஸ் ஆட்சி = முஸ்லிம்கள் ஆட்சி முஸ்லிம்கள் எதை செய்தாலும் இவர்கள் எதுவும் கேட்கமாட்டார்கள் அப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் , நாங்கள் செய்யவில்லை அவர்கள் தான் செய்தார்கள் என்று மழுப்புவார்கள், பெயருக்காக இரண்டு முஸ்லிம்களை கைது செய்வார்கள் அவ்வளவுதான் மக்களும் சிறிதுகாலத்திற்கு பிறகு அதை மறந்துவிடுவார்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை