உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாஜவுக்கு எம்.எல்.ஏ.,க்களை சப்ளை செய்யும் காங்கிரஸ்: சொல்கிறார் கெஜ்ரிவால்

பாஜவுக்கு எம்.எல்.ஏ.,க்களை சப்ளை செய்யும் காங்கிரஸ்: சொல்கிறார் கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:'காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது. 2027 கோவா சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.மாயேம் பகுதியில் ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு, அவர் கூறியதாவது; காங்கிரஸூடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக எம்எல்ஏக்களை காங்கிரஸ் மொத்தமாக பாஜவுக்கு விநியோகித்து வருகிறது. எதிர்காலத்தில் எந்தவொரு காங்கிரஸ் எம்எல்ஏவும் பாஜவுக்கு மாற மாட்டார்கள் என்று கோவா வாக்காளர்களுக்கு அக்கட்சியால் உறுதியளிக்க முடியுமா?2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜவுக்கு தாவினர்.2022ம் ஆண்டில் மட்டும் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்தனர். ஆம்ஆத்மி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், அது பாஜவுக்கு எம்எல்ஏக்களை வழங்குவதற்கு சமமாகி விடும். கோவாவில் பாஜ அரசு அமைவதற்கு உதவும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம். கோவாவில் அமைந்துள்ள காங்கிரஸ் மற்றும் பாஜவின் சீரழிந்த அரசியல் கட்டமைப்பை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு, கோவா மக்களுக்கு ஒரு புதிய விருப்பத்தை வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V Venkatachalam
அக் 05, 2025 16:05

பாவம் குஜ்ரிவாலு. இவரே பாஜகவுக்கு எம் எல் ஏ க்களை சப்ளை செஞ்சுட்டா போச்சு.எதுக்கு புலம்பணும்?


SVR
அக் 05, 2025 07:25

ஆமாம் எதுக்கு இந்த அர்பன் நக்சல் இப்படி கூவிகிட்டு இருக்கார்? தன்னுடைய சீட்டையே காப்பாத்திக்க முடியாதவரெல்லாம் கோவாவிற்கு போய் என்ன கிழிக்க போறார்? இவர் கட்சி நடத்தரத்துக்கு பணம் எங்கிருந்து வருகிறது? இவர கோவா மக்கள் என்ன ஏது என்று பார்க்காமலேயே இவர தூக்கி கடாச வேண்டும்.


Ramaraj P
அக் 05, 2025 06:52

அடுத்த டார்கெட் கேரளா.


Ramesh Sargam
அக் 05, 2025 01:34

IIT உருவாக்கிய ஒரே முட்டாள் இந்த கெஜ்ரிவால்.


jagadeesh
அக் 04, 2025 23:43

வாங்க கெஜ்ரிவால் டில்லியை முன்னேத்தின மாதிரி கோவாவையும் நல்லா முன்னேத்துங்க


RAAJ68
அக் 04, 2025 23:05

ஐயோ பாவம் தீபாவளி சமயத்தில் நமத்துப்போன பட்டாசு புலம்புகிறது.


முக்கிய வீடியோ