உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது: ஜெய்சங்கர் காட்டம்

காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது: ஜெய்சங்கர் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தானுக்கு தகவல் அளித்ததாக காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக, பார்லிமென்ட் ஆலோசனைக் குழு கூட்டம் டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசியதாவது:ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தானுக்கு தகவல் அளித்ததாக காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை நடத்தப்பட்ட பின்னரே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் உண்மையை தவறாக சித்தரிக்கிறது. இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பாகிஸ்தான் பரப்பும் எந்தவொரு போலி செய்திகளையும் அகற்றுவதில் அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது.லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்பின் தலைமையகங்களை பாதுகாப்பு படையினர் துல்லியமாக தாக்கினர். இந்த நடவடிக்கை வேறு எந்த முந்தைய அரசாங்கமும் நினைத்திருக்காத ஒன்று. 3 நாடுகள் மட்டுமே!உலகில் உள்ள 200 நாடுகளில், மூன்று நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றன, அதாவது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உலகம் பாராட்டியது என்பது தெளிவாகிறது. சில நாளில் தெரியும்சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதின் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெரியும்.பாகிஸ்தான் இந்தியாவைத் தூண்டும் வரை ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்பதில் எந்த குழப்பமும் இல்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் தவிர, பாகிஸ்தானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
மே 26, 2025 22:28

மத்திய அரசின் மீது எப்பொழுதும் பொய் குற்றச்சாட்டை வைக்கும் காங்கிரஸ் சீக்கிரம் அழியும்.


தமிழ்வேள்
மே 26, 2025 20:09

இதே வேறு ஒரு நாடாக இருந்தது என்றால் காங்கிரஸ் மாதிரி ஒரு தேச துரோக ஐந்தாம் படை கட்சியின் கடைசி தொண்டனைக் கூட விட்டு வைக்காமல் கருவறுத்து இருப்பார்கள்... இந்த அளவுக்கு மரியாதையடன் நடத்தப்பட்டதற்கு பாஜக & ஸ்ரீ மோதிஜி ஆகியோருக்கு நன்றியோடு இருக்க வேண்டும்...


தத்வமசி
மே 26, 2025 19:57

காங்கிரஸ் என்பது இந்திய திருநாட்டிற்குத் தேவையில்லாத கட்சியாக மாறி வருகிறது. ஒப்புக்கு ஒரு ஆதரவு அறிக்கையை கொடுத்து விட்டு, பாகிஸ்தான் நாட்டுக்காரன் போல கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே காங்கிரசுக்கு எல்லாம் நக்கிக்கிட்டு போய் விட்டது. இனி மொத்தமும் போய் விடும்.


Sundar R
மே 26, 2025 19:05

"ஆப்பரேஷன் சிந்தூர்" நடப்பதற்கு முன்பாக ஜெய்சங்கர் அவர்கள் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை. காரணம் பாகிஸ்தானியருடன் பேசுவதற்கு கருத்துக்கள் ஒன்றும் இல்லை. ஆப்பரேஷன் சிந்தூர் போருக்குப் பிறகு சேதாரங்கள் அதிகமானதால், பாகிஸ்தானியர்கள் தான் போரை நிறுத்துவதற்கு நமது ஆயுதப்படையினரிடம் கெஞ்சியதாக பத்திரிகைகளில் படித்தோம். ஆப்பரேஷன் சிந்தூர் முடிவடையும் தறுவாயில், பாகிஸ்தானியர்கள் ஜெய்சங்கர் அவர்களிடம் பேச வாய்ப்பிருக்கிறது. அப்போது, ஜெய்சங்கர் அவர்கள் என்ன பேசியிருந்தாலும் அதற்கு. SIGNIFICANCE ஒன்றும் இல்லை. ஏனென்றால், போர் நின்றுவிட்டது. ஜெய்சங்கர் அவர்கள் ஒரு DIPLOMAT. எந்த நேரத்தில் எவை சொல்லத் தகுந்தது. சொல்லத் தகாதது என்பது எல்லா டிப்ளோமட்களுக்கும் தெரியும். ஜெய்சங்கர் அவர்கள் மேல் கல்லெறிந்தால் நாலு நாகப்பழங்கள் கீழே விழுமா? என்று ராகுல் காந்தி அவர்கள் எதிர்பார்ப்பது மலிஞ்ச விலை அரசியல். ரத்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை ஒளிச்சு வைத்ததைப் போல் ஜெய்சங்கர் அவர்கள் ஒளிச்சு வைப்பதற்கு ஒன்றும் இல்லை. தேசப் பாதுகாப்பு விஷயங்களைத் தவிர நீங்கள் எந்த விபரங்களைக் கேட்டாலும், ஜெய்சங்கர் அவர்கள் திறமையான வகையிலும், கல்வியில் சிறந்த மேதைகள் பாராட்டும் வகையிலும் சொல்லத் தயாராக உள்ள ஒரு COMPLETE PROFESSIONAL.


தாமரை மலர்கிறது
மே 26, 2025 19:01

நேர்மையற்ற காங்கிரஸ் புறக்கணிக்கப்படவேண்டியது. தடைசெய்யப்படவேண்டியது.


Shankar
மே 26, 2025 18:57

மத்திய பாஜக ஆளும் அரசின்மீது கான் கிராஸ் கட்சிக்கு வீண்பழி சுமத்த வேறு வழி எதுவும் கிடைக்கவில்லை. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.


LAKSHMI NARASIMAN
மே 26, 2025 18:38

there is no difference between congress I and pakistan, both are same


sureshpramanathan
மே 26, 2025 18:35

Congress are Anti national elements They are part of LeT and Alquidha terrorists Dangerous Please put Sonia and Rahul in jail Everything will come to end


Mecca Shivan
மே 26, 2025 18:24

காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் சசி தாரூரரை அந்த குழுவில் சேர்த்தததுதான் பப்புவிற்கு கோவம் ..இருந்த ஒரே படித்த நபரும் இப்போது இல்லை..


RAMAKRISHNAN NATESAN
மே 26, 2025 17:56

ஐ எஸ் ஐ யின் இந்தியக் கிளைதான் காங்கிரஸ் .....


சமீபத்திய செய்தி