உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் சாசன தினம்: இன்று உச்சநீதிமன்றத்தில் மோடி உரை

அரசியல் சாசன தினம்: இன்று உச்சநீதிமன்றத்தில் மோடி உரை

புதுடில்லி: இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான, நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.கடந்த, 1949, நவ., 26ல், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பு சட்டம், 1950, ஜன., 26 முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்திய தினத்தை, ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். 1950 ஜன., 24 அன்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு, அரசியலமைப்பு சட்டமாக மாறின. இச்சட்டத்தின் படி நம் நாடு இயங்க வேண்டும்.இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்ற பாடுபட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தவும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2015, நவ., 26ல், சட்ட தினம் கொண்டாட உத்தரவிட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினம் கொண்டாடப்படுகிறது.இதையடுத்து அரசியலமைப்பு சட்ட தினத்தன்று ( இன்று நவ. 26), உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, மற்றும் நீதிபதிகள் பி.ஆர்.காவி, சூர்யகாந்த், உச்சநீதிமன்ற பார்கவுன்சில் தலைவர் கபில் சிபல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அரசியலமைப்பின் மதிப்பை இளம் தலைமுறையினருக்கு உணர்த்தவும், இந்திய அரசியலமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் உரையில் இடம் பெறுகிறது.

பார்லி.யில் ஜனாதிபதி உரை

அரசியலமைப்பு தினத்தையொட்டி இன்று (நவ. 26) பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுவதற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mathi Sekar
நவ 26, 2024 12:51

பாரத திருநாடு உலகின் மாபெரும் ஜனநாயக தேசம், உலகின் அதிசயங்களில் ஒன்று, அதன் ஆதாரமான இந்துமதத்துடனும் எல்லா மற்ற மதத்துடனும் மக்கள் கலந்து அமைதியாக மகிழ்வாக வாழும் அற்புத தேசம் 140 கோடி மக்களை சீனா போல இரும்பு அரசு அல்லாமல், வடகொரியா போல ஒரே தலமை அல்லாமல், சுல்தானியம் போல அரசன் அல்லாமல் ஆளமுடியும், அத்தேசம் உலகின் அமைதியான பலமான தேசமாக நிற்கமுடியும் எனும் அதிசயத்தை செய்யும் தேசம் பாரதம் தவிர எந்த நாட்டுக்க்கும் அப்படி ஒரு பெருமை இல்லை


Mathi Sekar
நவ 26, 2024 12:19

டெல்லி பார்லிமென்ட்ல பாத்தியளால, காங்கிரஸ் கட்சி எப்படி ஆடுதுன்னு.. நம்ப உள்நாட்டுக்காரன் இந்தியர் அதானிய கைதுபண்ணனும்னு அவுக மேல்நாட்டு விசுவாசத்த பாத்தியளால இப்பவே இப்படின்னா நேதாஜி காலத்துல எப்படி இருந்திருப்பானுக... ஆனா இந்த களபேரத்திலேயும் திமுக எம்பி எல்லாம் எங்களுக்கு நிதி வேணும்னு மட்டும் கேட்டுட்டு ஒருமாதிரி கம்முன்னு இருக்காவுக பார்த்தியால அதுதாம்ல அப்பவே சொன்னேன் அவுக ஒரு அண்டர்ஸ்டேண்ட்டுக்கு வந்துட்டாகண்ணு, இல்லண்ணா இப்ப அதானி அதானினு காது கிழியிற மாதிரி கத்திருக்கமாட்டாவ? என்னமோ வெறும் நூறு ரூவா நாணயத்துக்கு குதிச்சிய.. இப்ப பாத்தியளால எப்படி ஒழுங்கா இருக்காக பாருங்கல... அவுக இப்பல்லாம் நம்ப ஆளுல......


Mario
நவ 26, 2024 09:36

அந்த மணிப்பூர்?


Shankar
நவ 26, 2024 08:36

இன்றைக்கு பப்பு கையில மைக்க கொடுத்தா அது என்னென்ன உளறுமோ. இந்தியாவையோ இந்திய மக்களையோ முழுவதும் அறியாத பப்பு . தனது அப்பாவும் பாட்டியும் பலமுறை தங்களுக்கு சாதகமாக அரசியல் சாசனத்தை மாற்றி. மதச்சார்பற்ற ன்னு ஒரு புருடா விட்டு பத்து ஓட்டு கிடைக்க வேண்டி நாட்டையே வக்ப் வாரியத்திடம் அடமானம் வைத்து உச்சநீமன்றத்தையே பேந்த பேந்த முழிக்க வைத்து நீதிமன்றங்களும் வக்ப் வாரிய சட்டத்தில் பேசாமடந்தையாக்கிய ஒரு கேலிக்கூத்து அரங்கேற்றிய கட்சியின் இன்றைய தலைமுறை பப்புவுக்கு இதெல்லாம் தெரியுமா.கையில ஒரு சிவப்பு அட்டை புத்தகத்தை வெற்று பேப்பருடன் கையில பிடிச்சு இன்றைக்கு அது உளறுவதையும் இந்த நாட்டு மக்கள் கேட்க வேண்டிய அவல நிலை


Shankar
நவ 26, 2024 08:25

இன்றைக்கு பப்பு கையில மைக்க கொடுத்தா அது என்னென்ன உளறுமோ.


Senthoora
நவ 26, 2024 06:34

இன்னைக்கு என்ன பேசுவார், அதானி வழக்கை , அமெரிக்காவில் தவிடுபொடி ஆக்குவோம் என்று பேசபோறாரா?


Ramesh
நவ 26, 2024 07:47

உனக்கு என்னப்பா என்ன வேணும்னாலும் சொல்லுவ


Kasimani Baskaran
நவ 26, 2024 05:42

சனாதனத்தை அழிப்போம் என்று சூளுரைக்கும் சிலரை அரசியலமைப்புச்சட்டம் ஒன்று செய்யவில்லை என்பதை இன்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 26, 2024 09:42

வேறு மதங்களைக் குறைசொல்லிப்பேசினால் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்படும் .... ஹிந்துத்வா பேசும் பாஜக ஆட்சியில் கூட இதுதான் நிலைமை .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை