உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டுமானப்பணியில் விபத்து: டில்லியில் 3 தொழிலாளிகள் உயிரிழப்பு

கட்டுமானப்பணியில் விபத்து: டில்லியில் 3 தொழிலாளிகள் உயிரிழப்பு

புதுடில்லி: டில்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.டில்லியில் பஹர்கஞ்ச் பகுதியில் அடுக்குமாடி கட்டிட கட்டுமானப்பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு விரைந்து வந்தனர்.டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்., சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு கடவுள் சாந்தியை அளிக்கட்டும், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையை இழந்த குடும்பங்களுக்கு வழங்கட்டும்.இவ்வாறு ரேகா குப்தா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !