உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தில் தொடரும் கலவரம்: அமித்ஷா முக்கிய ஆலோசனை

வங்கதேசத்தில் தொடரும் கலவரம்: அமித்ஷா முக்கிய ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் கலவரம் தொடரும் நிலையில், அந்நாட்டை ஒட்டிய எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். அங்கு ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளது. இருப்பினும் அங்கு வன்முறை குறைந்தபாடில்லை. கலவரம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக நேற்று மட்டும் அந்நாட்டில் பல்வேறு இடங்களில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று வன்முறையாளர்கள் ஓட்டலுக்கு தீவைத்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், இந்த கலவரம் காரணமாக இந்திய எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
ஆக 07, 2024 09:49

நல்லா ஆலோசிச்சு நேருதான்.காரணம்னு கண்டுபிடிச்சுடுவாங்க. NCERT பாடபுத்தகத்திலும் வந்துரும்.


Gopalan
ஆக 07, 2024 07:04

அங்கு வசிக்கும் 1.5 கிராரே ஹிந்துக்களின் பாதுகாப்பும் அவர்களின் உடைமைகளின் பாதுகாப்பும், வாழ்வதாரமும் காப்பாற்ற பட வேண்டும். 57 முஸ்லிம் நாடுகள் உலகில் இருந்தும், ஒரு முஸ்லிம் நாட்டின் முஸ்லிம் பிரதமர், ஹிந்து நாட்டில் வந்து தஞ்சமடைய வேண்டிய அவசியம் நமது கலாச்சாரத்தின் சிறப்பை பிரதிபலிக்கிறது


T.sthivinayagam
ஆக 06, 2024 23:12

இந்த நிலமை இந்தியாவில் வராமல் இருக்க ராமர் அருள் புரியனும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 06, 2024 21:11

மேற்கு வங்கத்தில் நடக்கும் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு. நாடு முழுவதும் பரவியுள்ள பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்களை ஒரே நேரத்தில் லாடம் கட்டி வெளியேற்ற அருமையான வாய்ப்பு. மத்திய அரசு துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். துணிந்தவனுக்கு தோல்வி இல்லை.


ஆரூர் ரங்
ஆக 06, 2024 20:57

வங்கதேசத்தில் சிறுபான்மையினர்(ஹிந்துக்கள்) தாக்கப்படுவதை எதிர்த்து திமுக முஸ்லிம் லீக் தமுமுக மெழுகுவர்த்தி ஊர்வலம் செல்வார்கள்.


S.L.Narasimman
ஆக 06, 2024 20:20

எல்லை பகுதிகளில் அவசர நிலை அமல்படுத்தி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஊடுருவ முயலும் எல்லா தீவிரவாதிகளையும் இஸ்ரேல் போல களை எடுத்திடவேண்டும். நாட்டின் அமைதியே முக்கியம்


mindum vasantham
ஆக 06, 2024 20:17

நாடு மிக பெரிய நெருக்கடியில் உள்ளது .


venugopal s
ஆக 06, 2024 19:06

கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போகப் போகிறாரா? உள்ளூரில் மணிப்பூர் கலவரத்தை அடக்கத் தெரியாதவர் அடுத்த நாட்டின் கலவரத்தை அடக்கப் போகிறாரா?


RAMAKRISHNAN NATESAN
ஆக 06, 2024 21:31

அவர் ஆலோசனை செய்வது அங்கே கலவரத்தை அடக்க அல்ல .... அபத்தமான கருத்து .... முன்னேறிய மாநிலத்தில் ஒரு வேங்கைவயல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கத் துப்பில்லை ...... பேச வந்துவிட்டீர் ......


anbu
ஆக 07, 2024 03:41

அதாவது வேங்கை வயலை விட்டு விட்டு மணிப்பூர் நிலைமை பற்றி பேசுற மாதிரி என்று சொல்ல வரீங்களா?


Gopalan
ஆக 07, 2024 07:06

வெறுப்புணர்வு, பாஜகவின் செயல்பாடு, ஹிந்துக்களை ஒன்று இணைத்து இருப்பது, இவனை கதற வைக்கிறது


Svs Yaadum oore
ஆக 06, 2024 18:53

பங்களாதேஷில் ஹிந்துக்கள் மீதான வன்முறையை கண்டித்து , லட்ச தீவு மாலத்தீவு மணிப்பூர் பிரச்சனைக்கு மெழுகுவத்தி ஊர்வலம் சென்றது போல இந்த பிரச்சனைக்கும் விடியல் திராவிட கனியக்கா அவர்கள் மவுண்ட் ரோட்டில் ஊர்வலம் நடத்துவர் ....சமூக நீதி மத சார்பின்மையை விடியல் திராவிடனுங்க ஓரு நாளும் கைவிட மாட்டார்கள் ...


Rajah
ஆக 06, 2024 18:49

இதுதான் சந்தர்ப்பம். வங்க தேச எல்லையை பலப்படுத்துங்கள் . கூடுதல் இராணுவத்தை அனுப்பி வையுங்கள். எல்லையையில் கடுமையான நிரந்தர பாதுகாப்பு அவசியம். குடியேறிகளை நாடு கடத்துங்கள் எதிர்ப்பவர்களை தேசிய பாதுகாப்பு கருதி சிறையில் அடையுங்கள், சட்ட சபைகளையும் கலைத்து விடுங்கள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை