உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு; ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்; பிரசாந்த் கிஷோர்

பீஹார் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு; ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்; பிரசாந்த் கிஷோர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் மக்கள் பற்றிய சர்ச்சை பேச்சு குறித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர், பீஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பிரசாந்த் கிஷோர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். மேலும், அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தும், கேள்வியும் எழுப்பி வருகிறார். இந்த நிலையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை அவர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; ராகுல் பீஹாருக்கு வருவதும், போவதுமாக இருக்கிறார். மக்களை சந்திப்பதற்காக எந்த யாத்திரையையும் அவர் மேற்கொள்ளவில்லை. மக்களுடனான தனது தொடர்பை நிரூபிக்க ராகுல் ஒரு இரவாவது பீஹார் கிராமத்தில் தங்கியிருக்க முடியுமா டில்லியில் அமர்ந்து கொண்டு பீஹாரை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறார், என விமர்சித்த பேசினார்.மேலும், பீஹார் மக்கள் வேலை செய்வதற்காகவே பிறந்தவர்கள் என்று கூறிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அவர், ராகுலும், ரேவந்த் ரெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார். அவர் கூறியதாவது; சீக்கியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல, பீஹாரில் பிரச்சாரம் செய்வதற்கு முன்பு, இங்குள்ள மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். பீஹாரிகள் உழைப்பதற்காக மட்டுமே பிறந்தவர்கள் என்றால், நீங்கள் ஏன் இங்கு வருகிறீர்கள்? தெலங்கானாவில் பிரச்சாரம் செய்து உங்கள் வாக்குகளைப் பெறுங்கள், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
ஜூன் 28, 2025 08:28

நீ சும்மா இருந்தாலும்..... உன் வாய் சும்மா இருக்காது..... உன் வாய் சும்மா இருந்தாலும்.... நீ சும்மா இருக்க மாட்டாய்..... பப்பு.... பேசு பப்பு பேசு..... நீ பேச பேச தான் நாட்டை பிடித்த சனி கான் கிராஸ் இல்லாமல் போகும்.


Ramesh Sargam
ஜூன் 27, 2025 20:39

இப்படி தினமும் ஏதாவது ஏடாகூடமா பேசி இந்த ராகுல் எவ்வளவு நாளைக்குத்தான் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பாரோ?


தஞ்சை மாமன்னர்
ஜூன் 27, 2025 18:15

நீங்க இங்கே அப்பா வை முதல்வர் ஆக்கியது போல ஏன் ராவுள்ள பிரதமர் ஆக்க கூடாது? 1500 கோடி ஃபீஸ் போதுமா?


A.Kennedy
ஜூன் 27, 2025 15:31

ராகுல் இப்படித்தான் ஏதாவது உளறுவாறு அதையெல்லாம் கண்டுக்காம விட்டுடுங்க, அது தான் நமக்கும் நல்லது. இல்லைன்னா நமக்கு பைத்தியம் பிடுச்சிடும்.


Thravisham
ஜூன் 27, 2025 15:12

ராகுல் மன்னிப்பு கேட்பதை விட கீழக்கரையில் உள்ள தர்காவில் சேர்த்து மனநல சிகிச்சை பெறலாம். சேது படத்தில் விக்ரம் சிகிச்சை பெறுவது போல்


sundarsvpr
ஜூன் 27, 2025 14:17

அரசியலில் யோக்கியதை உண்மையாக உள்ளவர்கள் மட்டும் மன்னிப்பு கேட்பார்கள். அரசியலில் விரல் விட்டு எண்ணிவிடலாம். இதில் ராகுல் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை