உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சானிட்டரி நாப்கின் பெட்டியில் ராகுல் படத்தால் சர்ச்சை

சானிட்டரி நாப்கின் பெட்டியில் ராகுல் படத்தால் சர்ச்சை

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் பெண் வாக்காளர்களை கவரும் நோக்கில், காங்., சார்பில் வழங்கப்பட உள்ள சானிட்டரி நாப்கின் பெட்டியில், அக்கட்சி எம்.பி., ராகுல் புகைப்படம் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்., - நவ., மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. காங்கிரசுடன் கூட்டணி வைத்து, முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேர்தலை எதிர்கொள்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பெண் வாக்காளர்களை கவரும் நோக்கில், மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 'பிரியதர்ஷினி உதான் யோஜனா' என்ற பிரசாரத்தை காங்., முன்னெடுத்துள்ளது. இதன்படி, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த சானிட்டரி நாப்கின் பெட்டியில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த பெட்டியில், காங்., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஏழை பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் இடம் பெற்றுள்ளது.பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'சானிட்டரி நாப்கின் பெட்டியில் ராகுலின் படம் இருப்பது பீஹார் பெண்களை அவமதிக்கும் செயல். காங்., பெண்களுக்கு எதிரான கட்சி. வரும் சட்டசபை தேர்தலில், காங்., கூட்டணிக்கு பீஹார் பெண்கள் பாடம் புகட்டுவர்' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

கண்ணன்
ஜூலை 05, 2025 12:06

மஹா அப்பாவி சொல்கிறார்: ஆண்கள் கழிப்பறையிலும் போடலாமே


Thravisham
ஜூலை 05, 2025 08:59

ராகுலை எங்க சேரக்கனுமோ அங்கே பெண்குலம் சேர்த்துடும்.


sankaranarayanan
ஜூலை 05, 2025 08:25

சானிட்டரி நாப்கின் பெட்டியில் ராகுல் படத்தால் சர்ச்சை எந்த படத்தை யார் எங்கே போடுவது என்று ஒரு நியதி கிடையாதா பெண்கள் உரிமை கழகமே இதை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்து இது போன்ற ஆபாசமான விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் ராகுலுக்கு வேறு ஒன்றுமே விளம்பரத்துக்கு இல்லையா பாவம் அவர் கதி எப்படி போயிடுச்சு நாப்கின் அரசர் ராகுல் என்றே போடலாமே


Nandakumar
ஜூலை 05, 2025 08:04

ஒன்றும் தப்பில்லை. சானிடரி நாப்கின் விளம்பரங்களை விட இது ஒன்றும் பெரிய தப்பில்லை.


சீனி
ஜூலை 05, 2025 07:48

சபாஷ் சரியான போட்டி, குவாட்ட்ர் மேல சின்ன தத்தி படைத்த போடுங்கடா நாடு விளங்கட்டும்.


அப்பாவி
ஜூலை 05, 2025 07:40

பெண்மையை.போற்றுவோம். ஜெய் காமாக்யா தேவி. கமெண்ட் போடறவங்க திருந்துங்கடா.


எவர்கிங்
ஜூலை 05, 2025 07:14

சபாஷ்


நரேந்திர பாரதி
ஜூலை 05, 2025 05:22

காங்கிரஸ்காரர்களே ராவுல் பப்பு எங்க இருக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க...வரும் தமிழக சட்ட சபை தேர்தலிலும் இதைபோல் புதுசா திராவீடிய கும்பலும் செய்ய முயற்சி பண்ணும்


பா மாதவன்
ஜூலை 05, 2025 04:34

ஊருக்கு ஊர், தெருவிற்கு தெரு, பேருந்து நிலையம், நெல் தானியம், அரசு காப்பீட்டு திட்டம் , அரசின் அனைத்து திட்டங்களுக்கும், இப்படி எல்லாவற்றிற்கும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயரையோ, நல்லாட்சி தந்த நம் தமிழ் மாமன்னர்கள் பெயரையோ வைக்காமல் எங்கள் தமிழ் தலைவர் பெயரையே சூட்ட விரும்பும் தமிழகம், ஏன் சாராய கடைக்கும், சாராய புட்டிக்கும் மட்டும் தலைவர் படத்தை ஒட்டி அவரது பெயரை வைக்க வில்லை என்று புரிகிறதா...?


xyzabc
ஜூலை 05, 2025 01:46

நல்ல விளம்பரம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை