கொரோனா தொற்றுஎண்ணிக்கை 592 ஆக அதிகரிப்பு
புதுடில்லி : தலைநகர் டில்லியில் மேலும், 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை, ஏழு பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், டில்லி அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், சிறப்பு வார்டு, வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புதுடில்லி ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.