உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குப்பை கொட்ட சிங்லோவில் இடம் மாநகராட்சி முடிவு

குப்பை கொட்ட சிங்லோவில் இடம் மாநகராட்சி முடிவு

புதுடில்லி:டில்லி மாநகரில் தினமும் உருவாகும் கழிவுகளைக் கொட்ட சிங்கோலாவில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. காஜிப்பூரிலும் மற்றொரு இடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, டில்லி மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: டில்லி மாநகரில் உருவாகும் கழிவுகள் பால்ஸ்வா, ஓக்லா மற்றும் காஜிப்பூர் ஆகிய இடங்களில் உள்ள குப்பைக் கிடங்குகளில் கொட்டப்பட்டு மூன்று இடங்களிலும் மிகப்பெரிய குப்பை மலை உருவாகி விட்டன. இந்தக் குப்பை மலைகளை அகற்றும்பணி துவங்கியுள்ளது. இந்த மூன்று குப்பை மலைகளையும் முற்றிலும் அகற்ற டில்லி அரசு முடிவு செய்துள்ளது. டில்லியில் தற்போது தினமும் சேரும் குப்பைகளில் பெருமளவு மறுசுழற்சி செய்யப் படுகின்றன. மீதி குப்பைகளை கொட்ட மாற்று இடங்கள் தேடப்பட்டன. மாற்று இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு உடனுக்குடன் மறுசுழற்சி செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிங்லோவில் குப்பை கொட்டும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, காஜிப்பூரிலும் மற்றொரு இடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை