உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் உரிமையை அங்கீகரித்த உலக நாடுகள்: ஜெய்சங்கர்

இந்தியாவின் உரிமையை அங்கீகரித்த உலக நாடுகள்: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பயங்கரவாத செயல்களில் இருந்து தனது மக்களை காப்பதற்கான இந்தியாவின் உரிமையை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அங்கீகரித்து உள்ளன'' என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இத்தாலிய தேசிய தினத்தை முன்னிட்டு தலைநகர் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: பஹல்காமில் நடந்த கொடூர தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கு துணை நின்ற இத்தாலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பயங்கரவாத முகாம்களை அழித்து உறுதியான, தீர்மானமான பதிலடியை இந்தியா கொடுத்தது. பயங்கரவாத செயல்களில் இருந்து தனது மக்களை காப்பதற்கான இந்தியாவின் உரிமையை உலக நாடுகள் அங்கீகரித்து உள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
மே 29, 2025 04:08

டிரம்ப் மட்டும் இதை அங்கீகரிக்காமல் பாக்கிகளுக்கும் துருக்கிக்கு தங்களை அழிவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் வழங்கி சிறப்பித்துள்ளார். நடப்பதை பார்த்தல் இந்தியா போர்க்கோலம் போன்று நம்மை தாக்கவந்த எதிரியை அடித்து உடைத்து இருக்கவேண்டும் - கருணை அடிப்படையில் தாக்காமல் விட்டது நமக்கே கெடுதலான முடியும் போல தெரிகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்க இருந்த ஒரு அருமையான வாய்ப்பை இழந்துவிட்டோம்.


Karthik
மே 28, 2025 23:03

ஆனாலும் இந்த, திருந்தாத இத்தாலி காங் கட்சி மட்டும் மதில் மேல் பூனையாக உள்ளதே?? என்ன செய்ய.. எல்லாம் நம் சாபக்கேடு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை