உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டின் மாடியில் கஞ்சா வளர்த்த தம்பதி கைது

வீட்டின் மாடியில் கஞ்சா வளர்த்த தம்பதி கைது

சதாசிவ நகர்: வீட்டின் மாடியில் கஞ்சா வளர்த்த தம்பதி, கைது செய்யப்பட்டனர். 54 கிராம் எடையுள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.பெங்களூரு, சதாசிவநகரின், எம்.எஸ்.ஆர்., நகரில் வசிப்பவர் சாகர் குருங். இவரது மனைவி ஊர்மிளா குமாரி. இவர்கள் அசாமை சேர்ந்தவர்கள். எம்.எஸ்.ஆர்., நகரில் பாஸ்ட் புட் ஹோட்டல் நடத்துகின்றனர். ஹோட்டலின் மாடியில், தம்பதி வசிக்கின்றனர். இவர்கள் வீட்டின் பால்கனியில் அலங்காரத்துக்காக, கஞ்சா செடி வளர்த்துள்ளனர்..சில நாட்களுக்கு முன், ஊர்மிளா குமாரி, தன் வீட்டு பால்கனியில் நின்று ரீல்ஸ் செய்து, இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்திருந்தார். ரீல்சில் கஞ்சா செடிகள் இருக்கும் காட்சியும் பதிவாகியிருந்தது. இதை கவனித்த சில இளைஞர்கள், சதாசிவநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசாரும் நேற்று முன்தினம், சாகரின் வீட்டுக்கு வந்தனர். அப்போது ஹோட்டலில் இருந்த ஊர்மிளாவின் தங்கை, போலீசார் வந்துள்ளதை மாடியில் இருந்த அக்காவிடம் கூறினார். பீதியடைந்த ஊர்மிளா, பூந்தொட்டியில் வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை பறித்து, குப்பை கூடையில் போட்டுவிட்டார். இதை போலீசார் கண்டுபிடித்தனர். 57 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தம்பதியை கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். சாகருக்கோ அல்லது ஊர்மிளாவுக்கோ கஞ்சா பழக்கம் இல்லை. வீட்டு அலங்காரத்துக்காக மட்டுமே, கஞ்சா செடி வளர்த்தது தெரிந்தது.எனவே, ஸ்டேஷன் ஜாமினில் விடுதலை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை