மேலும் செய்திகள்
பெண் குழந்தையுடன் தாய் மாயம்
20-Sep-2025
கடப்பா : ஆந்திராவில், குடும்ப தகராறு காரணமாக ஒன்றரை வயது குழந்தையுடன் சரக்கு ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவின் கடப்பாவைச் சேர்ந்தவர் ஸ்ரீராமுலு, 35. இவர், தன் மனைவி சிரிஷா, 30, மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை ரித்விக்குடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. பரஸ்பரம் குற்றஞ்சாட்டி கொண்ட அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை ஸ்ரீராமுலுவின் பாட்டி தடு த்து நிறுத்தியதுடன், அவர்களை திட்டினார். இதனால் கோபமடைந்த தம்பதி, தங்கள் ஒன்றரை வயது மகனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். அருகே உள்ள கடப்பா ரயில் நிலையம் நோக்கி தண்டவாள த்தில் அவர்கள் சென்றனர். அப்போது எதிரே வந்த சரக்கு ரயில் மீது தங்கள் குழந்தையுடன் பாய்ந்தனர். இதில், உடல் சிதறி மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இ தையடுத்து, குழந்தையுடன் தம்பதி வீட்டை விட்டு வெளியேறிய சோகத்தில் இருந்த ஸ்ரீராமுலுவின் பாட்டியும், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. குடும்ப தகராறில், ஒரே குடும்பத்தின் நான்கு உயிர்கள் பறிபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
20-Sep-2025